சினிமா செய்திகள்
சிம்புவின் அடுத்த பட அறிவிப்பு எப்போது?

நடிகர் சிலம்பரசனின் அடுத்த படம் குறித்தான அறிவிப்பு எப்போது என்பது குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.
‘பத்துதல’ படத்திற்கு பிறகு நடிகர் சிம்புவின் அடுத்த படம் என்ன என்பது குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ‘மாநாடு’, ‘வெந்து தணிந்தது காடு’ என நடிகர் சிம்புவின் அடுத்தடுத்த படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
அந்த நிலையில் தற்போது ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்துதல’ படம் இந்த மாத இறுதியில் வெளியாக இருக்கிறது. இதன் இசை வெளியீட்டு விழா இந்த மாதம் 18ஆம் தேதி நடைபெற இருக்கிறது என்பதை படக்குழு டீசர் வெளியீட்டின் போது அறிவித்திருந்தது. கன்னட திரைப்படமான ‘மஃப்டி’யின் தழுவல் இது என்பதையும் இயக்குநர் தெரிவித்திருந்தார்.

Pathu Thala Release date poster
இப்போது பத்து தல படம் மார்ச் 30-ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
இந்த நிலையில் நடிகர் சிம்புவின் 48வது படம் என்ன என்பது குறித்தும், எந்த இயக்குநர் இயக்குவார் என்பது குறித்தும் ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படப்புகழ் தேசிங்கு பெரியசாமி இந்த படத்தை இயக்குவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் அளித்திருந்த பேட்டி ஒன்றில் நடிகர் சிம்பு தற்பொழுது தான் நடிப்புக்கு தீனி போடும் வகையிலான கதைகளை மிகவும் எதிர்பார்த்து காத்திருப்பதையும் அதற்கு ஏற்ற கதைகளையே பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து வருவதையும் தெரிவித்திருந்தார்.
இதனால் ரசிகர்கள் தன்னுடைய அடுத்த படம் குறித்து காத்திருப்பது நிச்சயம் மதிப்புமிக்கதாக இருக்கும் என்பதையும் சொல்லியிருந்தார் சிம்பு. இந்த வாரம் நடைபெற இருக்கும் ‘பத்துதல’ இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்புவின் அடுத்த படம் குறித்தான அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கலாம்.