Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

Published

on

  1. BINANCE கிரிப்டோ தளத்தில் ஒரே நேரத்தில் $6.36 பில்லியன் (ரூ.60,464 கோடி) மதிப்பிலான சொத்துக்களை வடகொரிய ஹேக்கர்கள் திருடியதாக அதிர்ச்சித் தகவல்!
  2. அரசு பணிகளில் நேரடி நியமனத்துக்கான வயது உச்ச வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி முதலமைச்சர் உத்தரவு. இன்று முதல் 5 ஆண்டுகள் வரை நடைமுறையில் இருக்கும். குரூப் 1 தேர்வை பொதுப்பிரிவினர் 37 வயது வரை எழுதலாம். குரூப் 2, 2ஏ தேர்வை 35 வயது வரை எழுதலாம்.
  3. இந்திய அஞ்சல் துறை அஞ்சல் குறியீட்டு எண்களாக (PIN CODE) வழக்கமாக நாம் பயன்படுத்தும் எண்களுக்கு பதிலாக தேவநாகரி எண்களை பயன்படுத்த உத்தரவு.
  4. விக்சித் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுதும் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை இலவசமாக பராமரிக்க தயாராக இருப்பதாக அப்போலோ குழும தலைவர் பிரதாப் சி ரெட்டி தெரிவித்துள்ளார்.“
  5. இந்திய கடற்படைக்கு ரூ.40000 கோடியில் 8 அதிநவீன போர்கப்பல்களை உள்நாட்டிலேயே தயாரிக்க ஒன்றிய அரசு ஒப்புதல்.
  6. உங்கள் உடலில் வியக்க வைக்கும் அளவுக்கு DNA உள்ளது! உங்கள் உடலில் உள்ள செல்களின் DNA-வை ஒன்றாக இணைத்து நேராக நீட்டினால், அது பல பில்லியன் மைல்கள் நீளமுள்ள ஒரு மூலக்கூறு இழையாக மாறும்! ஒவ்வொரு உட்கருவைக் கொண்ட மனித செல்லிலும் சுமார் 6.5 அடி நீளமுள்ள DNA உள்ளது. இவ்வளவு நீளமான மரபணுப் பொருள், கண்ணுக்குத் தெரியாத மிகச் சிறிய செல்லின் உட்கருவுக்குள் மிகவும் நெருக்கமாகச் சுருட்டி வைக்கப்பட்டுள்ளது.
  7. SIR விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி! SIR மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களை, புதிய வாக்காளர்களுக்கான படிவம் 6-ஐ நிரப்ப வற்புறுத்துவது ஏன்? இது சட்டவிரோதமா? தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Translate »
Show your website to real visitors across a network of other sites — completely free, with no advertising budget..