இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

- செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பங்களின் அசுர வளர்ச்சியால், அடுத்த 20 ஆண்டுகளில் வேலைவாய்ப்புகளில் மிகப்பெரிய சவால்கள் ஏற்படும் என மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் எச்சரித்துள்ளார்.
- ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றிய இந்திய மகளிர் அணி! ஹர்மன்ப்ரீத் கவுர், தீப்தி ஷர்மா ஆகியோர் சதமடித்து அசத்தல்! இந்திய மகளிர் அணியின் அபார ஆட்டத்தால் ரசிகர்கள் உற்சாகம்
- உலகம் முழுவதும் போலியோ ஒழிப்பு! பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளில் மட்டுமே காட்டு போலியோ வைரஸ் பரவல் தொடர்ந்து பதிவாகி வருகிறது. குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவது அவசியம்! ஒவ்வொரு குழந்தையும் பாதுகாக்கப்பட வேண்டும்.
- ஆன்லைன் விற்பனை அதிகரிப்பால் சிவகாசி பட்டாசுக் கடைகளில் நேரடி விற்பனை குறைந்துள்ளதாக விற்பனையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
- ஜெர்மனியின் பிரபல கார் நிறுவனமான BMW-யில் சுமார் 45 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர் ஒருவருக்கு, அவரது நீண்டகால சேவையைப் பாராட்டும் விதமாகப் புத்தம் புதிய BMW G80 M3 கார் மற்றும் ஒரு வீடு பரிசாக வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது
- ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் கார், பைக்குகளுக்கான 100% எத்தனால் (E100) எரிபொருளுக்கு மத்திய அரசு அனுமதி
- இந்தியாவில் புதிய இருசக்கர வாகனங்களை வாங்குபவர்களுக்கு 2 ஹெல்மெட்கள் வழங்குவதை கட்டாயமாக்க மத்திய அரசு முன்மொழிந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

