இந்தியா
தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.
ஒன்றிய அரசு கடந்த மாதம் உன்றிய அரசு பணியாளர்கள் மற்றம் ஓய்வூதியதார்ர்களுக்க 3% அகவிலைப்படி உயர்வினை 01.07.2026 முதல் முன்தேதியிட்டு வழங்கியதைத் தொடர்ந்து மாநிலஅரசுகளும் இதனை அமல்படுத்தின. அந்த வகையில் தமிழ்நாடு அரசு துறைகளில் பணியாற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வினை 01.07.2026 தேதி முதல் முன்தேதியிட்டு அறிவித்தது. இதன்படி ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 60% அகவிலைப்படி இந்த ஆண்டு 01.07.2026 முதல் 3% உயர்த்தப்பட்டு 63% ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அகவிலைப்படி உயர்வு ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கம் பொருந்தும்.
இந்த அறிவிப்பின் மூலம் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றம் குடும்ப ஓய்வூதியதார்ர்கள் ஆகியோர் பயன்பெற உள்ளனர். இதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது.
