இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

- 13 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் நிர்ணயித்து தமிழ்நாடு அரசு உத்தரவு. இதன்படி குறைந்தபட்ச தூரமான 1.8 கி.மீ.க்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.50 ஆகவும் கூடுதல் ஒவ்வொரு கி.மீட்டருக்கும் ரூ.25 ஆகவும் காத்திருப்புக் கட்டணம் ஒரு நிமிடத்திற்கு ரூ.1 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மலைப்பாதைகளில் குறைந்த பட்ச கட்டணத்தில் 1.2 மடங்கு. அடிப்படைக் கட்டணம் ரூ.60 கூடுதல் ஒவ்வொரு கிமீட்டருக்கும் ரூ.30. இரவு நேரக் கட்டணம் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை வழக்கமான கட்டணத்தில் 1.5 மடங்கு உயர்வு.
- இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில் வெளியாகி உள்ள கருத்துக்கணிப்புப் புள்ளிவிவரங்களின்படி, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது பெரும்பான்மையை இழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆட்சியை அமைப்பதற்கு 61 இடங்கள் தேவையான சூழலில், நெதன்யாகு அணி மற்றும் ஐசென்கோட் தலைமையிலான அணி ஆகிய இரண்டுமே தலா 51 இடங்களைப் பெற்று சமநிலையில் உள்ளன. அதேநேரத்தில் 18 இடங்களைக் கைப்பற்றியுள்ள அரபு கட்சிகளே ஆட்சியைத் தீர்மானிக்கும் முக்கிய அதிகாரத் துருப்புச்சீட்டாக மாறியுள்ளன. இதனால் இஸ்ரேலில் புதிய அரசாங்கத்தை அமைப்பதில் பெரும் அரசியல் இழுபறி உருவாகியுள்ளது.
- உ.பியில் FIR ல் பெயரே இல்லாத நபரை கைது செய்து எவ்வித விசாரணையும் இந்றி 6 ஆண்டுகள் சிறையில் இருந்த அருண் என்பவரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. “அவரின் 6 ஆண்டு கால வாழ்க்கையை அழித்து விட்டீர்கள்“ என்று போலீசாருக்கு கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம் அவருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது.
- தேசீய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியிலிருந்து 20 கி.மீ. தொலைவுக்குள் வசிக்கும் தகுதியான வாகன உரிமையாளர்களுக்கு நவம்பர் 1 முதல் புதிய உள்ளுர் FASTag பாஸ் வழங்கப்படும். ஆண்டுக்கு ரூ.1500 முதல் கட்டணம் இருக்கும்.
- ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பணிபுரியும் பணித்தளப் பொறுப்பாளர்களை 100 நாள்களுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிபவர்களை உடனடியாக மாற்ற வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது.
- அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கம் – நிறுவனத் தலைவர் சக்கரவர்த்தி அதிரடி அறிவிப்பு!
- 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்த MICROSOFT
- சொத்து விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது ஒத்திவைப்பு! நீதித்துறை அலுவலர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சுற்றறிக்கை!
- தமிழ்நாடு முழுவதும் அரசு துறைகளில் ஒப்பந்த ஊழியர்கள் எத்தனை பேர் பணியில் உள்ளனர்? எத்தனை ஆண்டுகள் ஒப்பந்த ஊழியர்களாக உள்ளனர்? – உயர்நீதிமன்ற கிளை கேள்வி.
