சினிமா
படம் ரிலீஸுக்கு பிறகு பிரியாணி போடுறாரே சிம்பு! எல்லாம் அடுத்த படத்துக்கா?

வாரிசு படத்தின் ரிலீஸுக்கு முன்பாக பனையூரில் தனது ரசிகர்களுக்கும் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும் நடிகர் விஜய் பிரியாணி விருந்து போட்டது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
மேலும், அந்த திரைப்படம் மெகா சீரியல் போல படு சுமாராக இருந்த நிலையிலும், 300 கோடி வரை வசூல் ஈட்ட ரசிகர்களை வெயிட்டாக விஜய் கவனித்தது தான் காரணம் என்கிற பேச்சுக்களும் அடிபட்டன.

#image_title
ஆனால், பத்து தல படம் ரிலீஸாகி தியேட்டர் பக்கமே ரசிகர்கள் போகாத நிலை உருவான பின்னர் நடிகர் சிம்பு திடீரென தற்போது பிரியாணி விருந்து போட்டிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
#STR48 என்கிற ஹாஷ்டேக் உடன் நடிகர் சிம்பு கொடுத்த பிரியாணி விருந்து வீடியோகள் டிரெண்டாகி வருகின்றன. பத்து தல படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இந்நிலையில், கமல் தயாரிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள படம் ஆரம்பிக்க உள்ள நிலையில், தற்போதே ரசிகர்களை தயார் செய்து வருகிறார் சிம்பு என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
சுமார் 100 கோடி பட்ஜெட்டில் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்தில் பிளாஷ்பேக் போர்ஷனுக்கு மட்டுமே 30 கோடி ரூபாய் செலவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கண்டிப்பாக அடுத்த படம் வேறலெவலில் வெற்றியடைய வேண்டும் என்கிற முனைப்பில் தான் நடிகர் சிம்பு இப்படி எல்லாம் செய்கிறார் என்கின்றனர்.