இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

- தமிழ்நாடு உருவாக்கப்பட்ட 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதியை பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 1ம்தேதி தமிழ்நாடு நாள் கொண்டாடப்படும் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
- வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல்! அதற்கு முரசு என பெயரிடப்படும். ஆந்திராவின் ஓங்கோல் அருகே வரும் செவ்வாய்க்கிழமை கரையை கடக்கிறது முரசு புயல் அதிகாரப்பூர்வமாக இந்திய வானிலை மையம் அறிவிப்பு
- ஆட்சியாளர்களை விமர்சிப்பவர்கள் தொடர்ந்து காவல்துறை நடவடிக்கைக்கு உள்ளாகிறார்கள் என்ற தோற்றமே ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தும். பேராசிரியர் கலையரசன் தொடர்பான காவல்துறை நடவடிக்கையின் சட்டபூர்வ அடிப்படை, புகார் மற்றும் விசாரணை விவரங்களை தமிழ்நாடு அரசு வெளிப்படையாக விளக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழுக் கூட்டம் வலியுறுத்துகிறது.
- தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 9 ம் தேதி கோயம்பேடு காய்கறி சந்தைக்கு விடுமுறை என வணிக வளாக அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு.
- சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தின் 2-வது அலகில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் 20 நாட்களுக்கு 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்.
- தேனி, கோவையை தொடர்ந்து சென்னையிலும் கைதி தப்பி ஓட்டம்
- தமிழ்நாட்டின் சினிமா தயேட்டர்களின் டிக்கெட் விலையை உயர்த்த தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை. இப்போதுள்ள ரூ.150லிருந்து ரூ.250க்கு உயர்த்தவும் மேலும் ஆண்டுக்கு 10 சதவீதம் உயர்த்தவும் கோரிக்கை.
