இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

- SIR மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களை, புதிய வாக்காளர்களுக்கான படிவம் 6-ஐ நிரப்ப வற்புறுத்துவது ஏன்? இது சட்டவிரோதமா? தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
- திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 750 கல்வெட்டுகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள்: தொல்லியல்துறை தொடங்கியது
- பிரபல பொருளாதார நிபுணர் கலையரசனை நேற்று அதிகாலை 5 மணிக்கு, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, இரவு உடையில் சட்டவிரோதமாகக் கைது செய்தது தவெக அரசின் காவல்துறை! கலையரசன் சமூக வலைதளங்களில் விலைவாசி உயர்வு குறித்துப் பேசியதால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அது அவருடைய இன்ஸ்டாகிராம் கணக்கே இல்லை; போலியான கணக்கு என்பது தெரியவந்துள்ளது.
- சென்னை அம்பத்தூர், திருவான்மியுர், தியாகராயநகர், செங்கல்பட்டு, கோவை ஆகிய 5 இடங்களில் சோதனை முறையில் முதற்கட்டமாகவும், மேலும் 20 இடங்களில் இரண்டாம் கட்டமாகவும் தனியார் பத்திரப்பதிவு மையங்கள் அமைக்க அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. பதிவு செய்வதற்கான அதிகாரங்களை மட்டும் அரசு நிர்வாகத்தின் வசம் வைத்துக்கொண்டு இதர நடைமுறை பணிகள் எல்லாவற்றையும் தனியாருக்குக் கொடுக்க விஜய் அரசு முடிவு.
- அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்கள் நியமனம் செய்ய தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு. அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் ஆட்களை நியமிக்க வேண்டும் என அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. நியமனப் பொறுப்பை சென்னையைச் சேர்ந்த அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் வழங்கி அரசிதழ் வெளியீடு.
- பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு அடுத்த ஆண்டு நடக்க உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பில், ஜாதி, மதம், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை உட் பட, 40 வினாக்கள் கேட் கப்பட உள்ளன. நாடு முழுதும் ஒவ் வொரு, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்ப டுவது வழக்கம்.
- ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய குடியரசுத் தலைவரிடம் மனு! தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக மு.க.ஸ்டாலின் புகார்!
