இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

- விசாரணை என்ற பெயரில் குற்றம் சாட்டப்பட்டவர்களை காவல்துறை துன்புறுத்தினால் அதை நீதிமன்றம் கண்டும் காணாமல் இருக்க முடியாது. விசாரணைக்கு அழைக்கப்படும் நபர்களுக்கு குறிப்பிட்ட தேதி நேரத்தைக் குறிப்பிட்டு எழுத்துப்புர்வமான அழைப்பாணை மூலமே அவர்களை அழைத்து விசாரணை செய்ய வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம்.
- தேனி தேக்கம்பட்டி கிறைச்சிறையில் 17 விசாரணைக் கைதிகள் தப்பிய நிலையில், சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தப்பிய 17 கைதிகளில் இதுவரை 4 பேர் பிடிபட்டுள்ள நிலையில், மீதமுள்ள 13 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த்து. இந்நிலையில் மேலும் 8 கைதிகள் பிடிபட்டுள்ளனர். கைதிகள் தப்பிய விவகாரத்தில் பணியில் இருந்த 9 சிறைக் காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
- தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 % வரை தீபாவளி போனஸ் மற்றமட் கருணைத்தொகை வழங்கப்படும். லாபம் ஈட்டிய நிறுவனங்களின் ஊஏழியர்களுக்கு 20 % போனஸ் மற்றம் லாபம் ஈட்டாத நிறுவனங்கள் மற்றும் சி, டி பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம் மற்றும் கருணைத்தொகையும் நவம்பர் 8 தீபாவளி பண்டிகையையொட்டி வழங்கப்பட உள்ளது.
- வடகிழக்கு பருவமழை காரணமாக பவானிசாகர், பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி!
- இரவு 11.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை ரயில் பெட்டிகளில் உள்ள மொபைல் சார்ஜிங் பாயிண்ட்களை கட்டாயமாக அணைத்து வைக்க வேண்டும். என ரயில்வே வாரியம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
- தமிழ்நாட்டில் மின்தேவை அதிகரித்து வரும் நிலையில் டிசம்பர் முதல் மே மாதம் வரை தேவைப்படும் மின்சாரத்தை வெளிச்சந்தையில் ஒரு யுனிட் மின்சாரத்தை ரூ.41.50க்கு கொள்முதல் செய்ய முடிவு.
- புதுக்கோட்டை மாவட்ட அதிகாரிகள் ஆன்லைன் கையெழுத்தை பயன்படுத்தி அரசு நிலத்திற்கு பட்டா வழங்கியுள்ளனர். மாவட்ட ஆட்சியரின் உதவியாளர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம்.

