இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

- கூட்டுறவு அங்காடிகளில் ரூ.200-க்கு 10 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு சென்னையில் நாளை முதல் கடலைபருப்பு, பாசிப்பருப்பு, உளுந்தம்பருப்பு, மிளகாய், தனியா, பூண்டு, புளி, கடுகு,சீரகம், சோம்பு உள்ளிட்டவற்றை வழங்க ஏற்பாடு.
- E governance “Test run” செய்யும் போது nic அமைப்புக்கு இரு மொழி கொள்கை அடிப்படையில் தான் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது திமுக அரசு… இப்போது ‘nic’ e governance software மும்மொழி கொள்கையை அரசு நிர்வாகத்தில் பயன்படுத்தும் தவெக அரசு…..
- மாற்றுத்திறனாளிகளுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் விரிவாக்கம். மாநகர, நகர, தாழ்தளப் பேருந்துகளிலும் விரைவு வண்டிகளைத் தவிர்த்து குறிப்பிட்ட பேருந்துகளிலும் இலவசப் பயணம் மேற்கொள்ளலாம். ஏற்கனவே வழங்கப்படும் 75% பயணச் சலுகையும் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- NEWS INDIA TAMIL 24X7 ஊடகவியலாளர்பிரேம்குமார் சென்னையில் கேரள மாநில கோழிக்கொட குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அதிக வட்டி தருவதாக கூறி ரூ.5000 கோடி நிதி மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார்.
- தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது!
- அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நாதக தலைவர் சீமான் போட்டி
- விலைவாசி உயர்வில் இந்தியாவை மிஞ்சிய தமிழ்நாடு
