இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

- இஸ்ரேலின் இனப்படுகொலையையும் ஈரான் மீதான அமெரிக்கப் போரையும் கடுமையாக எதிர்த்த லூலா டிசில்வா பிரேசில் அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி. தீவிர வலதுசாரியான ஃபிளாவியோ போல்சோனாரோவை வீழ்த்தி இடதுசாரி வேட்பாளர் லூலா வெற்றி!
- எக்ஸ் தளத்தில் இனி லைக் பட்டனை நீண்ட நேரம் அழுத்தினால் ஒரு டாலர் (ரூ,95) பணம் அனுப்பலாம். – எலான் மஸ்க் அறிவிப்பு. இந்த வசதி மூலம் கன்டென்ட் கிரியேட்டர்சுக்கு பயனர்கள் டிப்ஸ் வழங்குவது எளிதாகும்.
- காவிரி, முல்லைப் பெரியாறு, கிருஷ்ணா, பாலாறு தண்ணீர் பிரச்சினைகளுக்காக டெல்லியில் குரல் கொடுக்க வேண்டிய காவிரி தொழில்நுட்பக் குழுமத்தின் துணைத் தலைவரை இதுவரை தவெக அரசு நியமிக்கவில்லை!
- செர்பியாவில் 14 ஆண்டுகள் ஜனாதிபதியாக இருந்த அலெக்சாண்டர் வுசிக்-ஐ தோற்கடித்து ஆட்சியை கைப்பற்றிய மாணவர் அமைப்ப. ஊழலுக்க எதிராக கடந்த 2 ஆண்டுகளாக போராட்டங்களை நடத்திய கல்லூரி மாணவர்கள் ;Students List” என்ற இயக்கத்தை உருவாக்கி பொதுத்தேர்தலில் மாபெரும் வெற்றி. மொத்தமுள்ள 250 நாடாளுமன்ற இடங்களில் 140 இடங்களை வென்று சாதனை.
- விவாகரத்து செய்யப்பட்ட மனைவிக்கும் குழந்தைகளுக்கும் பராமரிப்புத் தொகையைச் (Maintenance) செலுத்தத் தவறியமைக்காகச் சிறைத்தண்டனை அனுபவித்த நபருக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்னிச்சையாகப் பொதுமன்னிப்பு வழங்கியமை அரசியலமைப்பால் உத்தரவாதமளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
- அக். 30-ல் விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் GSLV-F18 ராக்கெட்! ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து NVS-3 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது!
- தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியதில் ரூ.100 கோடி முறைகேடு செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னால் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது.
- கர்நாடகாவில் உள்ள மரகுபி கிராமத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளுக்காக 98 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொப்பல் அமர்வு நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது. இந்த போராட்டம் #CPIM மற்றும் அதன் வெகுஜன அமைப்புகளால் நடத்தப்பட்டது

