சினிமா
சோழர்களுடன் இணைந்த சிம்பு; சூப்பர்ஸ்டார் நோ சொன்னா STR வந்துடுவாரு போல!

பொன்னியின் செல்வன் 2 இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவுக்கு நடிகர் சிம்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கடந்த ஆண்டு நடைபெற்ற பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் என தமிழ் சினிமாவின் இரு பெரும் ஆளுமைகள் கலந்து கொண்டன.
அதிலும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியது ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிகம் கவர்ந்தது. வந்தியத்தேவன் ரோலில் என்னை நடிக்க சொன்னார் ஜெயலலிதா என ஒரு சூப்பரான குட்டி ஸ்டோரியையும் சொல்லி அந்த நிகழ்ச்சியை வேறலெவலில் வைரலாக்கினார்.

#image_title
ஆனால், இந்த முறை நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளதால் பொன்னியின் செல்வன் 2 ஷூட்டிங்கிற்கு வர முடியாது எனக் கூறிவிட்டாராம்.
கமல்ஹாசன் தலைமையில் தான் இந்த பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. கமல்ஹாசன் உடன் இணைந்து நடிகர் சிலம்பரசன் டிஆர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

#image_title
மேலும், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சோபிதா துலிபாலா, விக்ரம் பிரபு, பார்த்திபன், சரத்குமார் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நடிகர் சிம்பு ஜெயம் ரவி, கார்த்தி மற்றும் சியான் விக்ரம் அருகே அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி உள்ளன. சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள பத்து தல திரைப்படம் இன்று வெளியாக உள்ள நிலையில், ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்திருக்கிறார் சிம்பு.

#image_title
சமீப காலமாகவே சூப்பர்ஸ்டார் இல்லைன்னா STR அப்போ நான் வரேன் என்பதை போலவே நடந்து கொள்கிறாரா? என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.
பத்து தல படத்தில் நடிக்க ரஜினிகாந்த் மறுத்தார் என்றும் அந்த படத்தில் சிம்பு ஏஜிஆர் ஆக நடித்துள்ளார் என்றும் தேசிங் பெரியசாமி ரஜினிக்கு சொன்ன கதையில் தான் அடுத்து சிம்பு நடிக்கப் போகிறார் என்றும் பரபரப்பாக பேச்சுக்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

















