இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

- ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வு நாளை அக்டோபர் 28 முதல் அமல். தீபாவளி நெருங்கும் நேரத்தில் விலை உயர்வு. ஒரு லிட்டர் ஆவின் நெய் ரூ.80 உயர்ந்து ரூ.770 ஆக அதிகரிப்பு. பால்போவா, மைசூர்பாக், லஸ்ஸி என 67 பொருட்களின் விலையும் உயர்வு.
- தேனி மாவட்டச் சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறைக்குப் பின்னால் உள்ள வனப்பகுதியில் பதுங்கியிருந்த பிரவீன், சிலம்பரசன், ராஜ்குமார், ராஜா சிக்கந்தர் ஆகிய 4 கைதிகளை போலீசார் சுற்றி வளைத்துக் பிடித்துள்ளனர். தப்பிச் சென்ற 13 கைதிகளைப் பிடிக்க தனிப்படைகளை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
- நவம்பர் 1முதல் ஒரே விற்பனையில் ரூ.1000க்கு மேல் மதுபானங்களை வாங்கினால் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலமாக மட்டுமே பணம் செலுத்த வேண்டும். 2027 ஜனவரி 1 முதல் இந்த வரம்பு ரூ.500 ஆகக் குறைக்கப்படும். – டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அறிவிப்பு.
- திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிற்கு நவம்பர் 6ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவு
- இன்று முதல் அமலுக்கு வருகிறது கவுன்டரில் எடுக்கும் ரயில் டிக்கெட்களுக்கும் காப்பீடு: டிஜிட்டல் முறையில் மட்டுமே பணத்தை செலுத்த வேண்டும்
- குழந்தைகள் தினத்துக்கான கேக் கொள்முதல் பணியை எலைட் நேச்சுரல், டிரீம் பேக், பிரிட்டானியா, ஐடிசி ஆகிய நிறுவனங்கள் பெற்றுள்ளன. மொத்தம் ரூ.7.54 கோடி மதிப்பிலான இந்தப் பணியில் அதிகபட்சமாக டிரீம் பேக் நிறுவனத்துக்கு ரூ.3.84 கோடி மதிப்பிலான கேக் விநியோக பணி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நாட்டிலேயே முதல் முறையாக முதியோரை துன்புறுத்தினால் 3 வருடம் சிறை: கேரள சட்டப்பேரவையில் முதியார் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம்
- வரும் நவம்பர் 1 முதல் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் அணைத்துத் திருக்கோயில்களிலும் பிரசாதங்களின் விலை 20 சதவீதத்திலிருந்து 30 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
- வங்கக்கடலில் தீவிரமடையும் அர்னாப் புயல்! அதிகபட்சமாக மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை! ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசாவுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்.

