இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் – 30.10.2026

- நீட் தேர்வுக்குப் பிறகு மருத்துவக் கல்வியில் மிகப்பெரிய மாற்றம்! 2016 வரை மருத்துவப் படிப்பில் ஒரு சதவீதம் கூட சேராத சிபிஎஸ்இ மாணவர்கள் எண்ணிக்கை, 2026-ல் 56% ஆக அதிரடி உயர்வு! நீட் அறிமுகமான பிறகு ஏற்பட்ட இந்த மாற்றம் RTI தகவல் மூலம் அம்பலம்! தமிழக மருத்துவக் கல்வியில் சமூகநீதிக்கான விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ள புள்ளிவிவரங்கள்!
- நீர்நிலைகள், கோளில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா போட்டு கொடுப்பதை ஒரு நாளும் அனுமதிக்க முடியாது. இதற்காகத்தான் மக்கள் உங்களைத் தேர்ந்தெடுத்தார்களா? அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை.
- அமைச்சர்களின் பெயரைச்சொல்லி அவர்களது உதவியாளர்கள், உறவினர்கள் உள்ளிட்டோர் லஞ்ச லாவண்யத்தில் ஈடுபடக்கூடாது. மீறினால் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன் என முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை.
- தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இதன் காரணமாக, தமிழகத்தில் நவ., 1 முதல் மழை தீவிரமடையும்’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
- வாட்ஸ்அப் செயலியில் குழுக்களுக்கான பக்கத்தில் பிரத்யேகமாக ஸ்டேட்டஸ் பகிரும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் குழுக்களின் Updates பகுதியில் செய்தி அட்டைகள், படங்களை பகிர முடியும். மேலும் பதிவிட்ட ஸ்டேட்டஸை எத்தனை பேர் பார்த்துள்ளனர், யார் யார் பார்த்துள்ளனர், யார் லைக் செய்துள்ளனர் என்பதையும் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
- அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நாதக தலைவர் சீமான் பொது வேட்பாளராக போட்டி
- மாநில தலைமை தகவல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ்.நடராஜன் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு
