சினிமா செய்திகள்
ஆளுக்கொரு குழந்தையை தூக்கிக் கொண்டு மும்பைக்கு பறந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன்.. வைரலாகும் வீடியோ!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் தங்கள் குழந்தைகளுடன் மும்பை விமான நிலையத்திற்கு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அஜித் குமாரின் ஏகே 62 படத்தில் இருந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்ட பிறகு வெளியே தலை காட்டாமல் இருந்து வந்த நிலையில், மனைவி நயன்தாரா நடித்து வரும் பாலிவுட் படத்திற்கு பாடிகார்டாக குழந்தைகளுடன் கிளம்பி விட்டாரா என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

#image_title
இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தான் ஹீரோயினாக நடித்து வருகிறார். விஜய் சேதுபதி அந்த படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.
அந்த படத்தின் படப்பிடிப்புக்காக அடிக்கடி நயன்தாரா மட்டும் மும்பைக்கு சென்று வந்த நிலையில், தற்போது தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் நயன்தாரா மும்பைக்கு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

#image_title
கடைசியாக கனெக்ட் படத்தில் நயன்தாரா நடித்திருந்தார். ஆனால், அந்த படமும் நயன்தாராவுக்கு கடந்த ஆண்டு சுமாரான வெற்றியை மட்டுமே பெற்றுத் தந்தது. அதற்கு முன் நயன்தாரா நடிப்பில் வெளியான நெற்றிக்கண், ஓ2, காட்ஃபாதர், கோல்ட் படங்கள் படு தோல்வியை சந்தித்தன.
இந்நிலையில், அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படம் நயன்தாராவுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்ட நிலையில், வாடகைத்தாய் மூலமாக ட்வின்ஸ் ஆண் குழந்தைகளை பெற்றுக் கொண்டனர். இந்நிலையில், நயன்தாரா ஒரு குழந்தையையும் விக்னேஷ் சிவன் ஒரு குழந்தையையும் தூக்கிக் கொண்டு மும்பை விமான நிலையத்தில் தென்பட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.