சினிமா செய்திகள்
ஜெயிலர் ரிலீஸுக்கு முன்னாடியே நெல்சனுக்கு கிடைத்த சூப்பர் பரிசு.. கொடுத்தது யாரு தெரியுமா?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கி வரும் இயக்குநர் நெல்சனுக்கு சூப்பரான கிஃப்ட் ஒன்று கிடைத்துள்ளது. அதன் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெல்சன் பதிவிட்டு நன்றி தெரிவித்து இருப்பது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது.
விஜய் டிவியில் இயக்குநராக நிகழ்ச்சிகளை உருவாக்கி வந்த நெல்சன் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் படத்தை இயக்க முன் வந்தார். ஆனால், அந்த படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

#image_title
அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். அடுத்ததாக சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை இயக்கி முதல் முறையாக 100 கோடி வசூல் படத்தை கொடுத்து அசத்தி விட்டார்.
தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த நிலையிலும், அந்த படடம் சுவாரஸ்யமாக செல்லாத நிலையில், ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகளை கண்டு பிடித்து சர்வதேச அளவில் அந்த படத்தை ட்ரோல் செய்தனர்.
இந்நிலையில், அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் அடுத்ததாக ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் நெல்சன்.

#image_title
ரஜினிகாந்த், மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், தமன்னா மற்றும் ரம்யா கிருஷ்ணன் என பலர் இந்த படத்தில் நடித்து வரும் நிலையில், பாலிவுட் வில்லன் நடிகர் ஜாக்கி ஷெராஃப் மஞ்சள் நிற வெஸ்பா வண்டியை பரிசாக அளித்துள்ளார்.
பொதுவாக படம் ரிலீஸ் ஆகி ஹிட் அடித்த நிலையில் தான் தயாரிப்பாளர்கள் அல்லது நடிகர்கள் இயக்குநருக்கு கார் அல்லது பைக் உள்ளிட்ட பரிசுகளை வழங்குவர். ஆனால், ஜாக்கி ஷெராஃப் ஜெயிலர் படத்தில் நடித்த நிலையிலேயே, நெல்சனின் அன்பு பிடித்துப் போய் ஸ்கூட்டர் ஒன்றை பரிசாக வழங்கி உள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
அட்லீயை போல அடுத்து பாலிவுட்டில் தனது மகன் டைகர் ஷெராஃபை வைத்து புதிய படத்தை இயக்குவதற்கு அட்வான்ஸா இது என்றும் ரசிகர்கள் பிகில் வில்லனை பார்த்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.