Connect with us

சினிமா

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

Published

on

ஐஆர்எஸ் அதிகாரி தோ.சமய முரளி இயக்கத்தில், சுங்கத்துறை விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 தமிழகம் முழுவதும் வெளியாகிறது.

ஏற்கனவே படத்தின் 2 பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில்,  டிரைலர் அக்டோபர் 19 அன்றும் வெளியாகிறது

‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்‘ திரைப்படத்தை, இந்திய வருவாய் பணி (IRS) அதிகாரியான தோ.சமய முரளி இயக்கியுள்ளார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனங்களையும் அவரே எழுதியுள்ளதோடு, பிண்ணனி இசையும் அமைத்துள்ளார்.

இப்படத்தில் இருந்து சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘தாமரை’ பாடல் 2 மில்லியன் பார்வைகளை கடந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ‘தங்கம் தங்கம்’ பாடலும் 1 மில்லியன் பார்வைகளை கடந்து பாராட்டுகளை குவித்து வருகிறது. இதைத் தொடர்ந்து, ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ திரைப்படத்தை வரும் அக்டோபர் 30 அன்று தமிழகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் வெளியிடும் பணிகளில் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அதற்கு முன்னதாக, டீசர் அக்டோபர் 14 அன்றும், டிரைலர் அக்டோபர் 19 அன்றும் வெளியாகிறது.

 

ஜே.டி. சக்கரவர்த்தி, லால், சரண் சக்தி, பால சரவணன், ஸ்மேஹா, ராதிகா சரத்குமார், காளி வெங்கட், ஜாஃபர் சாதிக், மைம் கோபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படம், கடத்தல் உலகம் மற்றும் சுங்கத்துறையின் மறுபக்கம் குறித்து விறுவிறுப்பாக பேசுகிறது.

 

2008-ம் ஆண்டு இந்திய வருவாய் பணி (IRS) அலுவலர்கள் பிரிவைச் சேர்ந்த தோ.சமய முரளி, சுங்கத்துறை அமலாக்கம் மற்றும் மறைமுக வரிவிதிப்பு துறைகளில் நீண்ட காலமாகப் பணியாற்றியுள்ளார். என்.ஐ.டி. திருச்சிராப்பள்ளியில் பொறியியல் படித்த அவர், சிறப்பான பணிக்காக 2021-ம் ஆண்டு உலக சுங்க அமைப்பு (World Customs Organization) வழங்கிய உயரிய விருதைப் பெற்றுள்ளார்.

 

படம் குறித்து இயக்குநர் தோ. சமய முரளி கூறுகையில், “‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ நான் விசாரித்த பல சுங்கத்துறை வழக்குகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு கற்பனைக் கதை ஆகும். கடத்தல், நிழல் உலகம் மற்றும் சுங்கத்துறையின் செயல்பாடுகளை சுவாரசியமான சினிமா மொழியில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதோடு, நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் குற்றத்தடுப்பு வேலையில் சுங்கத்துறை வகிக்கும் முக்கியப் பங்கைப் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்தப் படத்தின் நோக்கம். இது வரை படத்தை பார்த்த அனைவரும் பெரிதும் பாராட்டி உள்ளனர். ரசிகர்களும் இந்த திரைபப்டத்தை வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்,” என்றார்.

 

மூத்த ஐஆர்எஸ் அதிகாரியான தோ.சமய முரளி, எழுத்தாளர், ஆய்வாளர், திரைப்பட இயக்குநர், இசையமைப்பாளர் மற்றும் நடிகராகவும் தன்னை நிலைநிறுத்தியுள்ளார். ‘சுங்கம்: தி ஹெரிடேஜ் ஆஃப் சென்னை கஸ்டம்ஸ்’, ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’, ‘காக்கி’ உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ள அவர் எழுதிய சுங்கத்துறை தொடர்பான இரண்டு ஆய்வுக் கட்டுரைகள் World Customs Journal-ல் வெளியாகியுள்ளன. அவர் இயக்கிய முதல் குறும்படமான ‘புதிய பார்வை’, மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மேலும் ‘சைலன்ட்’ எனும் திரைப்படத்தில் நடித்ததுடன், அதற்கு இசையும் அமைத்துள்ளார்.

 

எஸ் ஆர் ட்ரீம் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ். ராம்பிரகாஷ் தயாரித்துள்ள‌ ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’, அதிரடி, சஸ்பென்ஸ் மற்றும் யதார்த்தம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, நாட்டிற்காக பணியாற்றும் சுங்கத்துறையின் அர்ப்பணிப்பையும் தியாகத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டும் விறுவிறுப்பான திரைப்படமாக

உருவாகியுள்ள‌து.

இந்தியா2 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா4 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்5 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா5 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா24 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா2 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா2 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா3 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா2 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா2 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 08.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா2 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

Translate »
Biolinker.me Collect email leads, deliver lead magnets, book client calls, and grow your subscriber base directly from your custom bio page..