சினிமா செய்திகள்
சிம்பு நடித்த இந்தப் படம் அடுத்த வாரம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது – சர்ப்ரைஸ் சர்ப்ரைஸ்…

‘யங் சூப்பர் ஸ்டார்’ ஆக இருக்கும் எஸ்.டி.ஆர் என்னும் சிம்பு, ‘லிட்டில் சூப்பர் ஸ்டார்’ ஆக இருந்த போது நடித்த திரைப்படம் ‘மன்மதன்’. இது சந்தானத்தின் முதல் திரைப்படமாகவும் அமைந்தது.
வித்தியாசமான திரைக்கதை, சிம்புவின் கலக்கல் ஸ்டைல் உள்ளிட்ட காரணங்களால் இந்தப் படம் மிகப் பெரும் ஹிட் ஆனது. யுவன் சங்கர் ராஜாவின் மாயாஜால இசை, இந்தப் படம் வந்த போது, இளைஞர்களின் உதடுகளில் பல மாதங்கள் முணு முணுக்கப்பட்டன.
ஜோதிகா, சிம்புவக்கு ஜோடியாக நடித்த இந்தப் படத்தில் பாலிவுட்டின் பிரபல நடிகை மந்திரா பேடியும் நடித்திருந்தார். சிம்பு, இந்தப் படத்திற்குத் திரைக்கதை எழுதியது கூடுதல் பலம் சேர்த்தது.
#SilambarasanTR – #Jyotika ‘s 2004 Blockbuster #Manmadhan will re-release all over TN next Friday March 19th.. @thisisysr Musical pic.twitter.com/gj2bOjKJYa
— Ramesh Bala (@rameshlaus) March 11, 2021
இந்தப் படத்தின் சர்ப்ரைஸ் கதாப்பாத்திரமாக கவுண்டமணியும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். சிம்புவுக்கு இந்தப் படத்தில் முதன் முறையாக டூயல் ரோல் இருந்தது. இப்படி பல ப்ளஸ்களுடன் இன்றளவும் ரசிகர்களின் நெஞ்சை கொள்ளை கொள்ளும் திரைப்படமாக இருக்கும் ‘மன்மதன்’ அடுத்த வாரம், மார்ச் 19 ஆம் தேதி திரையரங்குகளில் ரீ ரிலீஸாகிறது.
இந்த செய்தியால் சிம்பு ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். கடைசியாக பொங்கல் திருவிழாவின் போது சிம்புவின் ‘ஈஸ்வரன்’ திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.



















