சினிமா செய்திகள்
ரூ.34 கோடியில் விராத்கோஹ்லி-அனுஷ்கா ஷர்மா வாங்கிய ஆடம்பர பங்களா: வைரல் புகைப்படங்கள்!

இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி மற்றும் நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோர் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர் என்பதும் இந்த தம்பதிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது என்பது தெரிந்ததே. மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தில் தனது மகளின் புகைப்படத்தை விராட் கோலி வெளியிட்டிருந்தார் என்பது அந்தப் புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விராட் கோலி தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் தான் வாங்கிய புதிய ஆடம்பர பங்களாவின் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். ரூபாய் 34 கோடி மதிப்பில் மும்பையின் முக்கிய பகுதியில் உள்ள இந்த பங்களாவில் பல்வேறு வசதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பங்களாவில் டெலிவிஷன் பார்ப்பதற்கு என்றே இருக்கும் ஒரு ஆடம்பரமான அறையில் அனுஷ்கா உட்கார்ந்து சிரித்துக்கொண்டே டிவி பார்ப்பது போன்ற ஒரு புகைப்படம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அனுஷ்கா சர்மாவின் டிரெஸ்ஸிங் ரூம் மிகவும் ஆடம்பரமாகவும் அட்டகாசமாக உள்ளதும் தெரிய வருகிறது.
மேலும் இந்த பங்களாவில் உள்ள குறிப்பிடத்தக்க ஒரு அம்சம் பால்கனி. இந்த பால்கனி முழுவதும் உயர்தர மரம் மற்றும் கண்ணாடிகளால் ஆனவை என்பதும் இந்த பால்கனியில் இருந்து பார்த்தால் அழகிய அரபிக்கடலின் வியூ தெரியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி விராட் கோலி தனது படுக்கை அறையையும் பகிர்ந்துள்ளார். மிகவும் ஆடம்பரமாக அதேசமயம் அழகாகவும் உள்ள இந்த படுக்கை அறையில் கிரே கலரில் பெயிண்ட் அடிக்க பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. இது குறித்த வீடியோ தற்போது வைரலாகி தயாராகி வருகிறது.




















