Connect with us

சினிமா

அறிமுகக் காட்சியில் எனக்கு கைதட்டல் வரவேண்டும், சிம்பு செய்த உதவி- சந்தானம் சொன்ன அந்த விஷயம்!

Published

on

‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்தின் வெளியீட்டு முன் நிகழ்வு  சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பேசிய கதாநாயகன் சந்தானம் “தில்லுக்கு துட்டு 1, தில்லுக்கு துட்டு 2, டி டி ரிட்டர்ன்ஸ் என அனைத்து படங்களுக்கும் எழுத்து வடிவில் எங்களுக்கு உதவிய எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய மறைவு எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு. இருந்தாலும் அவருடைய ஆன்மா எங்கள் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் என நம்புகிறேன்.

 

இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ள எஸ் டி ஆர் அவர்களுக்கு நன்றி. அவரைப் பற்றி நான் பல மேடைகளிலும், பல இன்டர்வியூக்களிலும் சொல்லியிருக்கிறேன், அவர் இல்லை என்றால் நான் இல்லை என்று. அவர்தான் என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தி , உயரத்திற்கு அழைத்துச் சென்றார். ‘காதல் அழிவதில்லை’ படத்தில் துணை நடிகராக நடித்திருக்கிறேன். அதனை பார்த்து தான் ‘மன்மதன்’ படத்தில் எனக்கு வாய்ப்பளித்தார் சிலம்பரசன்.

படப்பிடிப்பு தளத்தில் எனக்கான அறிமுகக் காட்சி பற்றிய விவாதம் நடைபெற்றது. “நீ லொள்ளு சபாவில் இருந்து சினிமாவிற்கு வந்திருக்கிறாய். உன்னுடைய அறிமுகக் காட்சியில் ரசிகர்களிடத்தில் கைதட்டல் வரவேண்டும். அதற்காக எப்படி உன்னை அறிமுகப்படுத்துவது” என விவாதித்து கொண்டிருக்கிறோம் என்றார். அந்த விவாதத்தில் நானும் கலந்து கொண்டு என்னுடைய யோசனையையும் சொன்னேன்.‌ அதன் பிறகு அந்த காட்சி படமாக்கப்பட்டது.

 

இதை ஏன் நான் இப்போது இங்கு சொல்கிறேன் என்றால், அன்றைய தினம் சினிமாவில் திரையில் நான் தோன்றும்போது கைத்தட்டல் இருக்க வேண்டும் என்று எனக்காக எடுத்த அக்கறையும், அன்பும் இன்று வரை குறையாமல் தொடர்கிறது. இது போன்றதொரு நல்ல மனம் படைத்த சிலம்பரசன் நண்பராக கிடைத்ததற்கு இறைவனுக்குத்தான் நான் நன்றியை சொல்ல வேண்டும். சிம்பு ஐ லவ் யூ. எப்போதும் அவருக்கு பின்னால் நான் இருப்பேன். எஸ் டி ஆர் 49லும் என்னுடைய பங்களிப்பை வழங்குவேன்” என்றார்

Translate »
Biolinker.me Sell digital products instantly, collect direct Stripe payments with only a 5% fee, and earn 50% commission referring products from your custom bio storefront..