சினிமா செய்திகள்
’பீஸ்ட்’ டிரைலருக்கு முன்பே விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சன் பிக்சர்ஸ்

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது என்பது ஏற்கனவே அறிந்ததே. இந்த ட்ரைலர் 2 நிமிடங்களுக்கு மேல் இருக்கும் என்று செய்திகள் கசிந்து உள்ளதால் விஜய் ரசிகர்களுக்கு இன்று சரியான விருந்து காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று வெளியாகும் டிரைலருக்கு பின் எதிர்பார்ப்பு உச்சத்தை அடையும் என்று கூறப்படுகிறது .
இந்த நிலையில் சற்று முன்னர் சன் பிக்சர்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ’பீஸ்ட்’ டிரைலருக்கு முன்பே ஒரு முன்னோட்டமாக வீடியோவை வெளியிட்டுள்ளது. 17 வினாடிகள் மட்டுமே இருக்கும் இந்த வீடியோ மாஸ் ஆக இருப்பதாக விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ரசிகர்களுக்கு இந்த வீடியோ இன்ப அதிர்ச்சியாக கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ்உள்பட பலர் நடித்துள்ளர். நெல்சன் இயக்கியுள்ள இந்த படத்திற்குஅனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.
#BeastTrailer is all set to get unleashed ????
Weight-ah kaatirlama nanba?#BeastTrailerFromToday @actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @selvaraghavan @manojdft @Nirmalcuts @anbariv #BeastModeON #Beast pic.twitter.com/kVB2mRUYAt— Sun Pictures (@sunpictures) April 2, 2022


















