சினிமா செய்திகள்
இப்படி ஒருத்தன் உள்ளே இருக்கும்போது ஹைஜாக் பண்ணினா என்ன ஆகும்? ‘பீஸ்ட்’ டிரைலர்

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் 3 நிமிட ட்ரெய்லர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் மாஸாக வைரலாகி வருகிறது
ராணுவ வீரரான விஜய் சென்னையில் உள்ள மால் ஒன்றுக்கு சென்று இருக்கும்போது திடீரென தீவிரவாதிகளால் மால் ஹைஜாக் செய்யப்படுகிறது. தனி ஒருவனாக விஜய் தீவிரவாதிகளிடமிருந்து மலில் உள்ள பொது மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்ற ஆக்ஷன் காட்சிகளுடன் கூடிய படம்தான் என்பது ‘பீஸ்ட்’ என்பது இந்த டிரைலரில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது
வீரராகவன் என்ற ராணுவ வீரர் கேரக்டரில்விஜய், தீவிரவாதிகளுக்கும் அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நட்த்தும் அரசு அதிகாரியாக செல்வராகவன், மாலில் மாட்டி கொண்ட பொது மக்களில் ஒருவராக பூஜா ஹெக்டே, யோகிபாபு என ஒரு நட்சத்திர கூட்டமே நடித்திருக்கும் இந்தப் படத்தின் டிரைலர் மிகப்பெரிய அளவில் சினிமா ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது