சினிமா செய்திகள்
வெங்கட்பிரபுவின் ‘மன்மதலீலை’: மீண்டும் ஒரு டைம்லூப் திரைப்படமா?

இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கிய மாநாடு திரைப்படம் ஒரு டைம்லூப் படம் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் அவர் இயக்கிய அடுத்த படமான மன்மதலீலை படமும் கிட்டத்தட்ட ஒரு டைம்லூப் படமாக உருவாகியுள்ளது.
2010ஆம் ஆண்டு ஒரு காதல், 2020ஆம் ஆண்டு ஒரு காதல் என இரண்டு காதல்களையும் மாற்றி மாற்றி ஸ்கிரீனில் காண்பித்து ரசிகர்களை குழப்பிவிட்டு, இரண்டாம் பாதியில் அனைத்து முடிச்சுகளையும் அவிழ்க்கும் ஒரு சிறந்த திரைக்கதை மன்னனாக வெங்கட்பிரபு இந்த படத்தில் நிரூபித்துள்ளார்.
அசோக் செல்வனின் மனைவியாக ஸ்ம்ருதி வெங்கட், காதலிகளாக ரியா சுமன், சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் நடித்துள்ளனர். மூன்று பேருமே தங்களுக்கு கொடுத்த வேலைகளை சிறப்பாக செய்துள்ளனர் .
ஓ மை கடவுளே படத்தில் மிகவும் சிறப்பாக நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்ற அசோக் செல்வன் இந்த படத்திலும் தனது அபாரமான நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.
இயக்குனர் வெங்கட் பிரபு ஒரே காட்சியை மீண்டும் மீண்டும் வைக்கிறார் என்று நினைக்கும் போதே திடீரென பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைக்கிறார். ஒரு சில குறைகள் இருந்தாலும் இந்த படம் இளசுகளுக்கு பிடிக்கும் படமாக இருக்கும் என்பதும் ஆனால் அதே நேரத்தில் போஸ்டரை பார்த்து உள்ளே பலான காட்சிகள் அதிகம் இருக்கும் என்று சென்றால் உங்களுக்கு ஏமாற்றம் தான் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


















