சினிமா செய்திகள்
மிதாலி ராஜாக மாறும் டாப்ஸி!

டாப்ஸியின் கேம் ஓவர் திரைப்படம் சமீபத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியானது. படம் பயங்கர த்ரில்லர் என விமர்சனங்கள் வந்தபோதும், ஆடியன்ஸை ஈர்க்காத காரணத்தால் படம் ஓடவில்லை.
இந்நிலையில், டாப்ஸி தனது அடுத்த படத்தில் மும்மூரமாக ஈடுபட்டு வருகிறார். ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் 6000 ரன்களை குவித்து அபார சாதனை படைத்த மிதாலி ராஜின் பயோபிக்கில் டாப்ஸி மிதாலி ராஜாக நடிக்கிறார்.
சின்ன வயதிலிருந்தே கிரிக்கெட்டே விளையாடாத தன்னால், இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது மிகவும் சவாலான விஷயம் எனக் கூறியுள்ள டாப்ஸி, கிரிக்கெட்டிற்கான வலை பயிற்சி மற்றும் மிதாலி ராஜ் குறித்த வீடியோக்களை பார்த்து பயிற்சி எடுத்து வருகிறாராம்.




















