சினிமா
இந்து கடவுளை அவமதித்தாரா வெற்றிமாறன் ஹீரோயின்; திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை டாப்ஸி. தமிழில் காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ஜன கண மன படத்திலும் நடிகை டாப்ஸி நடித்து வருகிறார். பாலிவுட் நடிகையாக மாறிய டாப்ஸி சமீப காலமாக தோல்வியை சந்தித்து வருகிறார்.

#image_title
ஆரம்பத்தில் நடிகை கங்கனா ரனாவத்துக்கே செக் வைத்து பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்தார்.
ஆனால், சமீப காலமாக டாப்ஸி நடித்து வெளியான அரை டஜன் படங்கள் படு தோல்வியை சந்தித்தன. இந்நிலையில், இந்து கடவுளை அவர் அவமதித்துள்ளதாக புதிய சர்ச்சை ஒன்று அவரது வாழ்வில் புயலை கிளப்பி உள்ளது.

#image_title
சமீபத்தில் நடைபெற்ற ஃபேஷன் நிகழ்ச்சியில் உள்ளாடை அணியாமல் படு கவர்ச்சியான உடையை அணிந்து கொண்டு ரேம்ப் வாக் செய்த நடிகை டாப்ஸி தனது கழுத்தில் மகாலக்ஷ்மி உருவம் பதித்த நெக்லஸை அணிந்திருக்கிறார்.
ஆபாசமாக உடை அணிந்து கொண்டு இப்படி இந்து மதக் கடவுளை அவமதிக்கலாமா என பாலிவுட் நெட்டிசன்கள் நடிகை டாப்ஸிக்கு எதிரான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

#image_title
நடிகை டாப்ஸி அடுத்ததாக ஷாருக்கானின் டன்கி படத்தில் நடித்து வருகிறார். முன்னா பாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ், பிகே, சஞ்சு உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இந்த படத்தை இயக்கி வருகிறார். நடிகர் ஷாருக்கான் அட்லீயின் ஜவான் மற்றும் ராஜ்குமார் ஹிரானியின் டன்கி படங்களில் தற்போது நடித்து வருகிறார்.