இந்தியா
மிதாலிராஜ் உள்பட 11 பேர்களுக்கு கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனை மிதாலி ராஜ் உள்பட 11 பேர்களுக்கு கேல் ரத்னா விருது பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2021 ஆம் ஆண்டுக்கான கேல் ரத்னா விருதுகள் 11 பேருக்கு வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, மிதாலி ராஜ் உள்பட 11 பேர்களுக்கு கேல்ரத்னா விருதும், இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் உள்பட 35 பேருக்கு அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தயான்சந்த் கேல் ரத்னா விருத்துக்காக தேசிய விளையாட்டு விருது குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்ட 11 வீரர்கள், வீராங்கனைகளின் விபரம் இதோ:
நீரஜ் சோப்ரா ஈட்டி -எறிதல்
ரவி தாஹியா -மல்யுத்தம்
ஸ்ரீஜேஷ் -ஹாக்கி
லவ்லினா -குத்து சண்டை
சுனில் சேத்திரி -கால்பந்து
மிதாலி ராஜ் -கிரிக்கெட்
பிரமோத் பகத் -பேட்மிண்டன்
சுமித் -ஈட்டி எறிதல்
அவானி லெஹரா -துப்பாக்கி சுடுதல்
கிரிஷ்ண நஹர் -பேட்மிண்டன்
மணீஷ் நர்வால் -துப்பாக்கி சுடுதல்
இவர்களில் யார் யாருக்கு கேல்ரத்னா விருது கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.






















