சினிமா செய்திகள்
‘என்னைப் போன்றவர்களுக்காக’- தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நடிகை டாப்ஸி!

என்னைப் போன்றவர்களுக்காக சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்க உள்ளதாக நடிகை டாப்ஸி அறிவித்துள்ளார்.
பாலிவுட்டில் மாறுபட்ட கதைகளில் தொடர்ந்து ஹிட் கொடுத்து வருபவர் நடிகை டாப்ஸி. சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியான ஹசின் தில்ருபா திரைப்படத்துக்குப் பெரும் பாராட்டுகள் கிடைத்துள்ளன. இதுமட்டுமல்லாமல் அடுத்த ஓராண்டுக்குக் கை நிறைய படங்களை வைத்துள்ளார்.
இந்த சூழலில் தன்னைப் போன்று சினிமா பின்னணி இல்லாமல் திரை உலகில் சாதிக்க நினைப்பவர்களுக்கு உதவும் வகையில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்குவதாக டாப்ஸி அறிவித்துள்ளார். மேலும் டாப்ஸி கூறுகையில், “என்னைப் போன்ற வெளியாட்களுக்கு சினிமாவில் ஒரு நுழைவு வாயிலாக எனது தயாரிப்பு நிறுவனம் இருக்கும்.

நான் மிகச்சிறந்த தயாரிப்பாளர் ஆக இருப்பேன் என பல ஆண்டுகளாக என்னைப் பார்ப்பவர்கள் கூறுவார்கள். இன்று அது சாத்தியமாகியிருக்கிறது. ப்ரென்ஜல் கந்தியா என்னும் தயாரிப்பாளர் உடன் இணைந்து இந்த நிறுவனத்தை நிர்வகிக்கப் போகிறேன்” என்று கூறியுள்ளார்.
டாப்ஸி ஏற்கெனவே ஒரு நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனம், 7 ஏசஸ் பூனே என்னும் பாட்மின்டன் அணி ஆகியவற்றின் முதலாளியாக இருந்து வருகிறார்.









