Connect with us

சினிமா செய்திகள்

விஜய் பிறந்த நாள் பரிசாக ரிலீசாகும் தளபதி 63 டைட்டில்!

Published

on

அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 63 படத்தின் டைட்டில், விஜய் பிறந்த நாளை முன்னிட்டு வரும் ஜூன் 21ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக தெறி, மெர்சல் மற்றும் சர்கார் படங்களின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் அந்த தினத்திலே ரிலீசாகி வேற லெவல் ரெஸ்பான்ஸை அள்ளியது.

வெறித்தனம், சிஎம் – கேப்டன் மைக்கேல், அதகளம் போன்ற டைட்டில்கள் ரசிகர்களால் சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகின்றன. இதில் சிஎம் எனப்படும் கேப்டன் மைக்கேல் டைட்டில் கன்ஃபார்ம் செய்யப்படலாம் என்ற பேச்சு பரவலாக அடிபட்டு வருகிறது.

இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் கோச்சாக மைக்கேல் எனும் கதாபாத்திரத்தில் விஜய் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் ஜாக்கி ஷெராஃப், கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

வரும் தீபாவளிக்கு தளபதி 63 படம் ரிலீசாகும் என்பதால், விஜய் பிறந்த நாளுக்கு பிறகு தளபதி 63 படத்தின் ஒவ்வொரு அப்டேட்ஸும் தளபதி ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
No coding, no credit card, no experience needed — choose what fits you and get started..