சினிமா செய்திகள்
டாப்ஸியின் ’கேம் ஓவர்’ டீஸர் நாளை ரிலீஸ்!

அஷ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை டாப்ஸி நடிப்பில் உருவாகி உள்ள கேம் ஓவர் படத்தின் டீஸர் நாளை ரிலீசாகிறது.

ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை டாப்ஸி, அதை தொடர்ந்து ஆரம்பம், காஞ்சனா 2 உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்த டாப்ஸி, பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் மற்றும் பாட்லா உள்ளிட்ட கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து, பாலிவுட்டில் முன்னணி நடிகையாக முன்னேறியுள்ளார்.
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் டாப்ஸியின் கேம் ஓவர் படத்தின் டீஸர் நாளை மதியம் 12 மணிக்கு ரிலீசாகிறது.
மேலும், இந்த படத்தை ஹிந்தியிலும் டப்பிங் செய்து டாப்ஸி வெளியிடுகிறார். ஹிந்தியில் வெளியாகும் கேம் ஓவர் டீஸரை இயக்குநர் அனுராக் கஷ்யப் வெளியிடுகிறார்.


















