Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் – 24.10.2026

Published

on

  1. GCC ஒப்பந்த முறையிலான தனியார்மயத்தை, அரசுப் போக்குவரத்துத் துறையில் கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு. போக்குவரத்துக் கழகங்கள் GCC என்ற பெயரில் தனியார் கைகளுக்கு ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக அரசுப் பேருந்துகள் மெல்ல மெல்ல தனியாரிடம் கையளிக்கப்படும். பின்னர் பேருந்தை இயக்கும் பணியாளர்களையும் படிப்படியாக ஒப்பந்த முறையில் தனியாருக்கு அளிக்கப்படும். கடைசி கட்டமாக போக்குவரத்துக் கழகங்கள் முழுமையாக தனியாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லப்பட்டுவிடும்.
  2. Britannia நிறுவனம் தன்னோட பிரெட்டை “100% Whole Wheat Bread”, “100% முழுக் கோதுமை பிரட்” என்று விளம்பரம் செய்தது.CCPA விசாரணையில் அந்த பிரெட்டில் 62% கோதுமை மாவு மட்டுமே இருந்தது தெரிய வந்தது. தவறான விளம்பரத்தால் நுகர்வோரை தவறாக வழிநடத்தியதற்காக தண்டனையாக ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு அச்சு, எலக்ட்ரானிக், சமூக ஊடகங்கள் அனைத்திலும் தவறான விளம்பரத்தை உடனே நிறுத்த வேண்டும்-15 நாட்களுக்குள் இணக்க அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
  3. டாஸ்மாக் கடையின் 100 மீட்டர் சுற்றளவில் பார் அமைக்க அரசு அனுமதி அளித்து புதிய விதியை வெளியிட்டது. இதனால் மது விற்பனை மையங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் வாய்ப்பு இருப்பதாக மது எதிர்ப்பு மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.
  4. விழுப்புரம் கோட்டத்திற்குட்பட்ட 6 மாவட்டங்களில் செலவைக் குறைப்பதற்காக நாளை முதல் பேருந்து சேவை குறைக்கப்பட இருப்பதாக மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார். விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், காஞசிபுரம், திருப்பத்தூர் மாவட்டங்களில் புறநகர் சேவைகள் உடபட 598 தடங்கள் குறைக்கப்பட உள்ளது. சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் ஒப்புதல் பெறாமல் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
  5. இனி வரும் இடைத்தேர்தலில் #அதிமுகவில் இருந்து விலகி வந்த MLA-களுக்கு #மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்க #தவெக விரும்பவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அவர்களுக்காக #பிரசாரம் செய்வதில் கூடுதல் #நெருக்கடி இருப்பதாக CM விஜய் கருதுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
  6. .உத்தரபிரதேசத்தில் கொலை வழக்கில் தண்டனை கொடுக்கப்பட்ட பாஜக நிர்வாகி…. நான் தேர்தலில் போட்டியிட போகிறேன் என்று சொன்னதற்காக அலகாபாத் நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளதாம்.
  7. ஓட்டுநர் உரிமம் வழங்கும் நடைமுறையில் முக்கிய மாற்றங்களைக் கொண்டுவர மத்திய அரசு திட்டம்; இதற்கான பரிந்துரைகளுடன் சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வரைவு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
  8. ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அது மாபெரும் பேரழிவை ஏற்படுத்தும் என பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் ‘Father of All Bombs’ போன்ற அதிபயங்கர ஆயுதங்களைக் கையிலெடுத்துள்ளது!

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

சினிமா7 நாட்கள் ago

ரோல்ஸ் ராய்ஸில் 🚗 ஆட்டோ டிரைவர்களை அழைத்துச் சென்று மாஸ் காட்டிய லெஜெண்ட்!

இந்தியா6 நாட்கள் ago

தனியார் மயமாகும் மின்கணக்கீட்டுப் பணி

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.10.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 20.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 22.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 24.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.10.2026

Translate »
Professional screen door installation repair in waco, temple, killeen, tx mr..