Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.10.2026

Published

on

  1. பிரபல சமையல் கலைஞரும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடையே பிரபலமானவருமான செஃப் தாமு உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவு சமையல் துறையினருக்கும் ரசிகர்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
  2. ஆவினில் பன்னீர், வெண்ணெய் உள்ளிட்ட 100 விதமான பால் பொருட்களின் உற்பத்திகள் நிறுத்தப்படுவதாக தவெக அரசு அறிவிப்பு. ஏற்கனவே பால் பாக்கெட் உற்பத்தியும் குறைக்கப்பட்டிருக்கிறது.
  3. சென்னையில் வானிலையை கண்காணிக்கும் ரேடார் கருவி செயல்படவில்லை என  வானிலை இலாகா தகவல்.. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரேடார் செயல்படாததால் நிகழ்நேர வானிலை நிலவரத்தை கணிப்பதில் சிக்கல்.
  4. கடலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட எல்லை அரங்கூரில் அமைக்கப்பட்டிருந்த பொருட்காட்சி, வெள்ளாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அடித்து செல்லப்பட்ட நிலையில் அதில் சிக்கியிருந்த ஒன்பது பேரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
  5. முக்கிய எச்சரிக்கை! SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு! கூகுள் மூலம் SBI மைய எண்ணைத் தேட வேண்டாம் என வங்கி நிர்வாகம் வேண்டுகோள்! ‘டார்க் வெப்’பில் வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசிந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. SBI வாடிக்கையாளர்களே, வங்கியின் அதிகாரப்பூர்வ தொடர்பு எண்களை மட்டுமே பயன்படுத்துங்கள்!
  6. கனமழை எதிரொலியாக ஊட்டி, கொடைக்கானல் மற்றும் ஏற்காடு ஆகிய மலைப்பகுதிகளுக்கு பயணம் செல்வதை பொதுமக்கள் சில நாட்களுக்கு தள்ளிப்போட அறிவுறுத்தல்.
  7. சீனா சென்றடைந்தார் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்! இரு நாடுகளையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்ட பாலத்தில் முதல் பயணம் மேற்கொண்டார்.
  8. வங்கக்கடலில் நாளை உருவாகிறது மிக தீவிர அர்ணாப் புயல்! 28-ம் தேதி ஆந்திர கடற்கரையை புயல் நெருங்கக்கூடும்!
  9. ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் நடவடிக்கை எடுத்தால், ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் இஸ்ரேலை வாழத் தகுதியற்ற பகுதியாக மாற்ற முடியும்! — இப்ராஹிம் அஜீஸி, ஈரான் நாடாளுமன்ற தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுத் தலைவர். இஸ்ரேலின் எரிசக்தி நிலையங்கள், கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைகள் மற்றும் முக்கியப் பாலங்களைக் குறிக்கும் வரைபடங்களை X தளத்தில் வெளியிட்டு அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
  10. ஈரான் மீது மிக விரைவில் மீண்டும் தாக்குதல்..” -அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைக்கு அமெரிக்கப் போர் கப்பல்களும், USS George Washington விமானந்தாங்கி கப்பல் குழுவினரும் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

சினிமா7 நாட்கள் ago

ரோல்ஸ் ராய்ஸில் 🚗 ஆட்டோ டிரைவர்களை அழைத்துச் சென்று மாஸ் காட்டிய லெஜெண்ட்!

இந்தியா6 நாட்கள் ago

தனியார் மயமாகும் மின்கணக்கீட்டுப் பணி

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.10.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 20.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 22.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 24.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.10.2026

Translate »
Pages sell products.