சினிமா செய்திகள்
ஸ்பெயின் மக்கள் தனுஷை விரும்புகின்றனர் – இயக்குநர் கென் ஸ்காட் ட்வீட்!

தி எக்ஸ்ட்ராடினரி ஜார்னி ஆஃப் தி ஃபகீர் படத்தை இயக்கிய கென் ஸ்காட், நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் தனுஷை ஸ்பானிஷ் மக்கள் பெரிதளவில் விரும்புகின்றனர் என்றும் தனுஷ் நடிப்பில் வெளியான அந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் கூறினார்.
அவருக்கு நன்றி தெரிவித்த தனுஷ், எல்லாம் உங்களாலே சாத்தியம் ஆனது என்றார்.
2018ம் தேதி வெளியிடப்பட்ட தி எக்ஸ்ட்ராடினரி ஜார்னி ஆஃப் தி ஃபகீர் திரைப்படத்திற்கு கடந்த மே 1ம் தேதி பார்சிலோனா சாண்ட் ஜோர்டி சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நகைச்சுவை திரைப்படத்திற்கான ஆடியன்ஸ் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழில் இந்த படம் வெளியாக வாய்ப்பிருக்கா என்பதை நடிகர் தனுஷ் இதுவரை தெரிவிக்கவில்லை. அதற்கான பணிகள் விரைவில் துவங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
















