சினிமா செய்திகள்
வாழ்க்கையை போல ஆடையும் ஏன் கலர்ஃபுல்லா இருக்கக் கூடாது – ரகுல் ப்ரீத் சிங்!

நடிகை ரகுல் ப்ரீத் சிங், தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய கலர்ஃபுல்லான ஆடையை அணிந்து வித்தியாச வித்தியாசமாக போஸ் கொடுத்து போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

மேலும், அதில், நமது வாழ்க்கையை போல ஆடையும் ஏன் கலர்ஃபுல்லாக இருக்கக் கூடாது என்ற கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்ஜிகே படத்தில் நாயகியாக நடித்துள்ள ரகுல் ப்ரீத் சிங், என்ஜிகே படத்தின் கிராண்ட் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.
நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்தியுடன் ரகுல் ப்ரீத் சிங் அண்மையில் நடித்த தேவ் படம் படு தோல்வியை அடைந்த நிலையில், என்ஜிகே படமாவது, கோலிவுட்டில் தனக்கான அங்கீகாரத்தை அளிக்குமா? என்ற எதிர்பார்ப்பில் ரகுல் ப்ரீத் சிங் உள்ளார்.


















