சினிமா
விஜய்யை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாகும் த்ரிஷா.. நம்பர் ஒன் தான் போல!

96 படத்திற்கு பிறகு தனது அடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள நடிகை த்ரிஷா ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் பிளாஷ்பேக் போர்ஷனில் க்யூட்டாக வந்து போனார். ஆனால், பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்த நிலையில், அவரது மார்க்கெட் வேறலெவலில் உயர்ந்து விட்டது.
நயன்தாராவிடம் விட்ட தனது நம்பர் ஒன் இடத்தை மீண்டும் தட்டித் தூக்கி உள்ளார் த்ரிஷா. பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 பாகங்கள் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்திய நிலையில், அடுத்ததாக விஜய் உடன் லியோ படத்தில் நடிக்கும் வாய்ப்பு அல்வா போல த்ரிஷாவுக்கு கிடைத்தது.

#image_title
லியோ படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக தனுஷின் 50வது படத்திலும் நடிகை த்ரிஷா நடிக்கப் போவதாக அதிரடி தகவல்கள் வெளியாகி உள்ளன.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடிக்கவுள்ள 50வது படம் பெரிய பொருட்செலவில் உருவாக உள்ளதாக கூறுகின்றனர்.

#image_title
ஏற்கனவே தனுஷ் உடன் கொடி படத்தில் நடிகை த்ரிஷா செம கெமிஸ்ட்ரியுடன் நடித்த நிலையில், தனுஷ் இயக்கத்தில் தற்போது நடிக்கப் போகும் நிலையில், அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகளால் நயன்தாரா நெருங்கக் கூட முடியாத அளவுக்கு கோலிவுட்டில் பக்கா பவுண்டேஷன் போட்டு விட்டார் என்கின்றனர்.