சினிமா
3 படத்தை போல லால் சலாம் படத்தின் கதையும் திருட்டுக் கதையா? ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு ஏற்பட்ட சிக்கல்!

ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது காதல் கணவர் தனுஷை வைத்து இயக்கிய 3 திரைப்படமே ஹாலிவுட்டில் வெளியான தி பியூட்டிஃபுல் மைண்ட் படத்தில் இருந்து அப்படியே அப்பட்டமாக காட்சிகளை சுட்டு எடுத்த படம் தான் என அப்போதே ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பின.
இந்நிலையில், தற்போது அப்பா ரஜினிகாந்த், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்தை வைத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் லால் சலாம் படத்தின் கதையும் திருட்டுக் கதை சர்ச்சையில் சிக்கி உள்ளதாக கோலிவுட்டில் ஹாட் டாபிக் ஒன்று வைரலாகி வருகிறது.

#image_title
மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் பட்டறையில் இருந்த வந்த மோகன் என்பவர் எழுதி கடந்த ஆண்டு லைகா நிறுவனத்துக்கு அனுப்பிய கதையை அப்படியே பட்டி டிக்கெரிங் பார்த்து தான் இந்த படத்தை உருவாக்கி வருகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்கிற சந்தேகத்தை சம்பந்தப்பட்ட மோகனே கிளப்பி உள்ளாராம்.
அவர் எழுதிய கதையில் இரு கால்பந்தாட்ட வீரர்களுக்கு மத்தியில் நடக்கும் கேட் அண்ட் தி மவுஸ் கேம் தான் படமே எனக் கூறியுள்ளார்.

#image_title
கால்பந்தாட்டத்திற்கு பதிலாக அதை அப்படியே கிரிக்கெட்டாக மாற்றி இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தை எல்லாம் இணைந்து இயக்கி வருகிறாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால், அந்த கதைக்கு இந்த கதைக்கும் சம்பந்தமே இல்லை என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்பு விளக்கம் அளித்திருப்பதாகவும் கூறுகின்றனர்.