ஆரோக்கியம்
பூண்டு தக்காளி சட்னி ரெசிபி: இட்லி, தோசைக்கு சூப்பரான சுவைமிகு சட்னி செய்வது எப்படி?
Published
11 மாதங்கள் agoon
By
Poovizhi
காலை டிபனாக அடிக்கடி இட்லி, தோசை சாப்பிடுபவர்களுக்கு சட்னி தான் முக்கியமான சைடு டிஷ். ஆனால் தினமும் ஒரே மாதிரியான சட்னி சாப்பிட்டு போரடித்து விட்டீர்களா? அப்படியானால், பூண்டு தக்காளி சட்னி செய்து பாருங்கள். இது சுலபமாக செய்வதோடு, சுவையிலும் மாறுபட்ட அனுபவத்தை தரும். குறிப்பாக பேச்சுலர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் விரைவாக செய்யக்கூடிய ரெசிபி இது.
🌿 தேவையான பொருட்கள்:
எண்ணெய் – 1 டீஸ்பூன்
பூண்டு – 15 பல்
வரமிளகாய் – 10
தக்காளி – 1
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
கொத்தமல்லி – தேவையான அளவு
கறிவேப்பிலை – சில
உப்பு – சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு:
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி – சிறிது
🍳 செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு பற்களையும் வரமிளகாயையும் சேர்த்து வதக்கவும்.
அதில் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி, புளி மற்றும் கொத்தமல்லியையும் சேர்த்து வதக்கவும்.
தக்காளி வெந்ததும் அடுப்பை அணைத்து குளிரவிடவும்.
பின்னர் மிக்சரில் வதக்கிய பொருட்களை உப்புடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
இப்போது சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
தாளிக்க ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
அதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கி, அரைத்த சட்னியை சேர்த்து 5 நிமிடம் கிளறி வைக்கவும்.
எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கவும்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

வேகவைத்த தக்காளி சட்னி ரெசிபி: இட்லி, தோசைக்கு சூப்பரான சுவையான சைடிஷ்!

1 மாதம் கெடாமல் இருக்கும் கார சட்னி ரெசிபி – இட்லி, தோசை, சாதத்துக்கும் பொருத்தமான சுவை!

வெங்காயம், தக்காளி இல்லாமல் 10 நிமிடத்தில் செய்யக்கூடிய சூப்பர் இஞ்சி துவையல் – பேச்சுலர்களுக்கு பர்பெக்ட் ரெசிபி!

பழுத்த மிளகாயை தூக்கிப் போடாதீர்கள்! இதோ அருமையான வெங்காய சட்னி ரெசிபி


















