ஆரோக்கியம்
தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

காலநிலை மாற்றத்தின் காரணமாக salinity உயர்ந்து வருவதால் தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் பிரிவினருக்கு EGFR Estimated Glomerular Filtration Rate குறைந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது சிறுநீரகம் இரத்தத்திலிருந்து உப்பு மற்றும் கழிவுகளை பிரித்தெடுக்கும் வேகம் விகிதாச்சாரம் குறைவதாக சிறுநீராகவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
EGFR என்றால் என்ன?
ஒவ்வொருவரின் வயிற்றிலும் இரைப்பைக்கு இரண்டு பக்கங்களிலும் தலா ஒரு கிட்னி அதாலது ஒரு சிறுநீரகம் என இரண்டு சிறுநீரகங்கள் இருக்கும். இந்த சிறுநீரகத்தின் பிரதான பணியானது உடலில் உள்ள ரத்தத்தை வடிகட்டி அதிலிருந்து உப்பு சில திரவங்கள் சில புரோட்டீன்கள் மற்றும் சில கழிவுப் பொருள்களை பிரித்தெடுத்து வெளியேற்றுவதுதான். இதைத்தான் EGFR என்கிறோம். மருத்துவர்கள் இதை நிர்ணயிக்க பினவரும் சில காரணிகளைப் பயன்படுத்துகின்றனர்.
- சீரம் கிரியேட்டினைன் – இது தோலிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு வெளியேற்றப்படும் ஒரு கழிவ.
- நோயாளியின் வயது
- நோயாளி ஆணா அல்லது பெண்ணா?
- சிஸ்டேட்டின் சி – இது சிறுநீரகத்தில் காணப்படும் ஒருவித புரோட்டீன்.
இந்த EGFR விகிதம் குறைவதால் சிறுநீரக பாதிப்புக்கள் குணமாக்குவதில் சில சிக்கல்களை ஏற்படுத்தக் கூடிய சூழல்கள் உருவாகி சிறுநீரக நோய் அடுத்தகட்ட நிலையை எட்டிவிடும்.
எனவே இந்த நிலை குறித்த விழிப்புணர்வு தமிழ்நாட்டு மக்களிடம் ஏற்படுத்தப்படுவது மிக முக்கியமான பணியாக மாறி வருகிறது. காரணம் தமிழ்நாட்டில் சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை மிக அதிகம். அதாவது மொத்த மக்கள் தொகையான 8 கோடிப் பேரில் 80 லட்சம் முதல் ஒரு கோடி பேர்வரை தமிழ்நாட்டில் சர்க்கரை நோயின் பல்வேறு கட்ட பாதிப்புக்களை தம்மிடம் கொண்டுள்ளனர். இதில் வெறும் பத்து சதவீதம் பேர் மட்டும்தான் தங்களது சர்க்கரை நோயினை கட்டுக்குள் வைத்துள்ளனர். மீதி 90 சதவீதம் பேரும் கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய் உள்ளவர்களாகவே உள்ளனர்.
பெரும்பாலோனோர் தங்களது 30 முதல் 35 வயது காலங்களிலேயே அதிகளவில் சர்க்கரை நோய்க்கு ஆளாகின்றனர். இவர்கள் அணைவரும் கண்டிப்பாக 50லிருந்து 60 வயது காலங்களில் சிறுநீரகம் தொடர்பான ஏதாவதொரு கடுமையான பாதிப்புகள் உள்ளவர்களாக மாறுகின்றனர். இவர்களில் 30 சதவீதம் பேர் பக்கவாதம் எனப்படுகிற ஸ்ட்ரோக் மற்றும் வேறு ஏதாவது ஒரு சிறுநீரக வியாதியிலோ அல்லது புற்றுநோய் நோயாளியாகவோ மாறக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக சிறுநீரகவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் மேலும் 600 புதிய டயாலிசிஸ் மையங்கள் அமைக்க ஒன்றிய அரசு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது, ஏற்கனவே சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்Nவறு நகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் மட்டுமல்லாது பல்வேறு அரசு மருத்துவமனைகளிலும் கூட நூற்றுக்கணக்கான டயாலிசிஸ் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒரு டயாலிசிஸ் மைத்தில் ஒரு நாளைக்கு 6 முதல் 7 நோயாளிகளுக்கு மட்டுமே டயாலிசிஸ் செய்யமுடியும் என்ற நிலையில் பல்வேறு மையங்களில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் டயாலிசிஸ் அப்பாயிண்ட்மென்ட் கோரியும் அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்தவர்கள் தங்களுக்கான சிகிச்சைக்கான நாள் மற்றும் நேரத்திற்காக காத்திருக்க வேண்டிய அவலமான சூழ்நிலையும் காணப்படுகிறது. காலையில் டயாலிசிஸ் செய்து கொண்டு மதியம் வேலைக்கோ அல்லது பல்வேறு அலுவல்களுக்கோ செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அப்பாயிண்ட்மென்ட் பெறுவதில் பெரிய அளவிலான ரெக்கமெண்டேஷனும் பல நேரங்களில் தேவைப்படுகின்ற அவலமும் காணப்படுகிறது. அந்த அளவுக்கு முற்றிய சிறுநீரக நோய் பாதிப்புகள் பெருகி வந்து கொண்ருக்கிறது.
மேலும் அதற்குரிய பண்யாளர்கள் பற்றாக்குறையும் பெரிய அளவில் காணப்படுகிறது. இந்த துறை சார்ந்த டிப்ளமோ மற்றும் பட்டப் படிப்புக்ள் பல்வேறு கல்வி நலையங்களில் நடத்தப்பட்டு ஆண்டுதோறம் நிறைய பேர் தேர்ச்சி பெற்று இத்துறையில் வரக்கூடிய சூழ்நிலையும் காணப்படுகிறது.
முற்றிய சிறுநீராக நோயானது EGFR மற்றும் சிறுநீரிலுள்ள ஆல்புமின் மற்றும் கிரியேட்டினைன் விகிதாச்சாரம் ஆகியவற்றின் அடிப்படையில் G1, G2, G3, G4, G5 என 5 பிரிவுகளாக கணக்கிடப்பட்டு சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தடுக்கக்கூடிய வழிமுறைகள்
- காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை உணர்ந்து நமது சிறுநீரகங்கள் பாதிப்படையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
- மது மற்றும் போதைப் பொருள் பயன்பாடுகளிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
- வேதிப்பொருள்கள் சேர்க்கப்பட்ட குளிர்பானங்களின் மிதமிஞ்சிய பயன்பாடு தவிர்க்கப்பட வேண்டும்.
- உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவற்றின் மீதான கவனிப்பும் கட்டுப்பாடும் அவசியமானது.
- அவ்வப்போது ரத்தம் மற்றும் சிறுநீரில் ஆல்புமின் கிரியேட்டினைன் மற்றும் சிஸ்டேட்டின் சி ஆகியவற்றைக் கண்டறிறம் பரிசோதனைகள மேற்கொண்டு மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்து கொள்ள வேண்டும்.
- நவீன வாழ்க்கைமுறைகளிலிருந்து மாறி பாரம்பரியமான வழிமுறைகள் மற்றும் உணவுப்பழக்கங்களை கைக்கொள்ள வேண்டும்.
நாம் மட்டுமல்லாது நமது சந்ததியினரும் இந்த கொடிய சிறுநீரக நோய்களிலிருந்து விடுபட்டு பாதுகாப்பான வாழ்க்கை வாழ்ந்திட நம்மாலான அணைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.







