Connect with us

சினிமா செய்திகள்

மீண்டும் அஜித்-மாரல் யாசர்லூ சந்திப்பு: உலக பைக் பயணத்திற்கு தயார்?

Published

on

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உலகை பைக்கில் சுற்றி வந்த மாரல் யாசர்லூ என்பவரை தல அஜித் சந்தித்தார் என்பதும், டெல்லியில் நடந்த இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் அதே மாரல் யாசர்லூ அவர்களை மீண்டும் அஜித் சந்தித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழு கண்டங்களில் உள்ள 64 நாடுகளுக்கு பைக்கிலேயே சுற்றுப்பயணம் செய்து வந்த இளம்பெண் மாரல் யாசர்லூ சாதனை செய்த நிலையில் அதே போன்ற ஒரு சாதனை செய்ய அஜித் திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் பல பைக் நிபுணர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

அந்த வகையில் டெல்லியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மாரல் யாசர்லூ அவர்களை நேரில் சந்தித்து அவருடைய பயண அனுபவங்கள் அஜித் குறித்து கேட்டறிந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் மாரல் யாசர்லூ அவர்களை அஜித் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது அஜித் மேலும் சில விபரங்களை மாரல் யாசர்லூ அவர்களிடம் இருந்து கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

அஜித் நடித்து முடித்துள்ள ’வலிமை’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ள நிலையில் அவர் அடுத்ததாக மீண்டும் எச் வினோத் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தையும் போனிகபூர் தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பை மிக குறுகிய காலத்தில் அதாவது 3 மாத காலத்திற்குள் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இதனை அடுத்து அடுத்த ஆண்டு அஜித் உலகை பைக்கில் சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாகவும் குறிப்பாக ஐரோப்பா ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பைக்கில் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான முயற்சிகளில் தற்போது அஜீத் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Business franchise magazine is a bi monthly publication that offers the latest news, expert advice, and franchise information from australia and new zealand.