Connect with us

சினிமா

பாக்ஸிங் பயிற்சி- நடிகர் மஹத்தின் அடுத்த அவதாரம்!

Published

on

“அஜித் அண்ணா தான் இன்ஸ்பிரேஷன்!” ~ ஆஸ்திரேலிய பாக்ஸிங் சாம்பியன் கோயன் மசூடியரிடம் பயிற்சி பெற்ற நடிகர் மஹத் ராகவேந்திரா

‘மங்காத்தா’, ‘பேக்பென்ச் ஸ்டூடண்ட்’, ‘டபுள் XL’ போன்ற படங்களில் தனது தனித்துவமான கதாபாத்திரங்களால் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் மஹத் ராகவேந்திரா. தனது பிசிக்கல் டிரான்ஸ்ஃபர்மேஷனுக்காக தற்போது பாக்ஸிங் கற்றுள்ளார். கடந்த ஒரு வருடமாக இந்தியாவில் பாக்ஸிங்கில் நடிகர் மஹத் கடுமையான பயிற்சி பெற்று வந்தார். இதைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் ஆஸ்திரேலியாவில் பாக்ஸிங் பயிற்சி பெற்றார்.

இந்த வருடம் அதாவது 2025 ஆஸ்திரேலிய சூப்பர் வெல்டர்வெயிட் குத்துச்சண்டை சாம்பியனான கோயன் மசூடியரிடம் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்ததுதான் நடிகர் மஹத் குத்துச்சண்டை பயணத்தின் சிறப்பம்சம். இந்த அனுபவத்தை “சக்தி, வேகம், கவனம், சமநிலை மற்றும் திறமை ஆகியவற்றின் நம்பமுடியாத பயணம். இதில் பல சவால்கள் இருந்தாலும் அதை சமாளித்து பயிற்சி பெற்றேன். இது ஃபிட்னஸ் தொடர்புடையது மட்டுமல்ல, ஒரு போராளியின் மனநிலையையும் எனக்குள் உருவாக்கியது” என்று நடிகர் மஹத் கூறினார்.

மேலும் கோயனுடன் பயிற்சி பெற்றது பற்றி விவரிக்கும்போது, “கோயனிடம் பயிற்சி பெற்றது சிறந்த அனுபவம். பாக்ஸிங் அரங்கமோ அல்லது கேமராவுக்கு முன்பு என்றாலுமே சரி வெற்றிபெற தேவையான கவனம், உத்தி மற்றும் மன ஒருமைப்பாடு பற்றிய ஆழமான புரிதலை எனக்கு அளித்தது” என்றார்.

இந்தப் புதிய அத்தியாயத்தின் மூலம் மஹத் தனது தனிப்பட்ட வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பு, உடல் ரீதியாகவும் கலை ரீதியாகவும் தன்னை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்வதையும் இதன் மூலம் உறுதி செய்துள்ளார். “நடிகர்கள் தங்களுக்கான ஸ்டிரீயோ டைப்பை உடைக்க வேண்டும் என்பதை கார் ரேஸ் சாதனைகள் மூலம் எனக்கு அஜித் அண்ணாதான் புரிய வைத்தார். நான் விரும்பும் போட்டி விளையாட்டுகளில் பங்கேற்கவும், என் திறமையை நிரூபிக்கவும் இனிவரும் காலங்களில் விரும்புகிறேன். அடுத்தடுத்து எனது படங்களிலும் திறமையை மேம்படுத்தவும் இது உதவும்” என்றார்.

இந்தியா2 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 11.11.2026

இந்தியா5 மணி நேரங்கள் ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

இந்தியா5 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.11.2026

சினிமா7 மணி நேரங்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

செய்திகள்10 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.11.2026

இந்தியா1 நாள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா5 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா5 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

சினிமா2 நாட்கள் ago

இந்தியா5 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

Translate »
Your first backlinks will appear within minutes — and your website gets cited on other sites at the same time..