Connect with us

சினிமா செய்திகள்

யோகிபாபுவுக்கு நன்றி தெரிவித்து டுவிட் போட்ட விவேக் மகள்: காரணம் இதுதான்!

Published

on

காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு மறைந்த நடிகர் விவேக்கின் மகள் டுவிட்டர் பக்கத்தில் மூலம் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் காலமானார் என்பது தெரிந்ததே. அவர் தடுப்பூசி போட்ட ஒரு சில நாட்களில் உயிரிழந்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற சிமா விருது வழங்கும் விழாவில் விவேக் நடித்த ’தாராள பிரபு’ என்ற படத்திற்கு விருது கிடைத்தது. அந்த படத்தில் சிறப்பாக நடித்த விவேக் அவர்களுக்கு சிறந்த நகைச்சுவை நடிகர் என்ற விருது கிடைத்த நிலையில் அந்த விருதை நடிகர் யோகிபாபு பெற்றுக் கொண்டார்.

அதன் பின்னர் சென்னை திரும்பியதும் அவர் நேராக விவேக்கின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரிடம் விருதை ஒப்படைத்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதனை அடுத்து விவேக்கின் டுவிட்டர் பக்கத்தில் அவரது மகள் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அந்த டுவிட்டில் எனது தந்தை அவர்களுக்கு கிடைத்த விருதை யோகி பாபு அண்ணா பெற்று அதை கொண்டு வந்து கொடுத்ததற்கு மிகவும் நன்றி என்றும் தாராள பிரபு படக்குழுவினருக்கும் நன்றி என்றும் இந்த விருது அளித்த சிமா விருது குழுவினருக்கும் தனது நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக் மறைந்த பின்னர் அவரது டுவிட்டர் பக்கத்தில் எந்தவிதமான டுவிட்டுக்களும் பதிவு செய்யப்படாத நிலையில் அவரது மகள் பதிவு செய்த இந்த முதல் டுவிட் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் நடிகர் விவேக்கின் டுவிட்டர் பக்கத்தை தொடர்ந்து ஆக்டிவ்வாக வைத்து இருங்கள் என்றும் அவர் இறந்தது தெரியாமல் அவர் உயிருடன் இருக்கிறார் என்ற உணர்வு அவரது டுவிட்டர் பக்கத்தில் பார்க்கும்போது ஏற்படுகிறது என்றும் ரசிகர்கள் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 நாள் ago

மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் தோல்வியடைந்தது.

ஆட்டோமொபைல்1 நாள் ago

கார் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது நோட் பண்ணியிருக்கீங்களா..? ஏன் தெரியுமா?

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.04.2026

ஆன்மீகம்1 நாள் ago

திருநள்ளாறு சனி பெயர்ச்சி 2026: சித்திரை அமாவாசையில் சனி நட்சத்திர மாற்றம் – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

வணிகம்2 நாட்கள் ago

அட்சய திருதியை 2026: தங்க விலை லாக் செய்வது லாபமா? மறைந்திருக்கும் நுணுக்கங்கள் என்ன?

செய்திகள்2 நாட்கள் ago

பெண்கள் இடஒதுக்கீடு & தொகுதி மறுவரையறை மசோதாக்கள்: ராகுல் காந்தி மற்றும் கனிமொழி கடும் எதிர்ப்பு!

வணிகம்2 நாட்கள் ago

EPS ஓய்வூதியம் எப்படி கணக்கிடப்படுகிறது? தனியார் ஊழியர்களுக்கு மாதம் எவ்வளவு கிடைக்கும்?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 நாட்கள் ago

ஏப்ரல் 20–26 வார ராசிபலன் 2026: இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

இந்தியா2 நாட்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா2 நாட்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

இந்தியா5 நாட்கள் ago

வாக்குச் சாவடியில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை

ஆரோக்கியம்7 நாட்கள் ago

அட்சய திரிதியா 2026: 50 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய யோகம் – இந்த 4 ராசிகளுக்கு செல்வமும் வெற்றியும்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

கோடைகால ஆரோக்கியம்: வெயிலில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன? முழு வழிகாட்டி

வணிகம்7 நாட்கள் ago

DA vs DR விவகாரம்: ஓய்வூதியதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு – சமத்துவம் கட்டாயம்!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக் குழு புதிய அப்டேட் 2026: சம்பளம், ஓய்வூதியம் எவ்வளவு உயரும்? முழு விவரம்

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 12.04.2026

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா ரெசிபி: இட்லி, தோசைக்கு சூப்பர் சைடு டிஷ்!

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 13 ஏப்ரல் 2026 (திங்கட்கிழமை)

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஃபரினா ஆசாத் Weight Loss Secret: 10 கிலோ குறைத்த டயட் & ஃபிட்னஸ் ரகசியம்!

Translate »
At aaa mush love, we believe in the. Martinstools | professional saas tools for everyone. heavy equipment transport lubbock tx.