சினிமா செய்திகள்
அஜித் குமார், சென்னை கார் ரேஸ் நடத்திய முதல்வர், துணை முதல்வருக்கு பாராட்டு!

துபாய் கார் ரேஸில் வெற்றி பெற்ற அஜித் குமார், சென்னையில் நடத்தப்பட்ட கார் ரேஸுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறைக்கு கிடைத்து வரும் ஆதரவு குறித்தும், குறிப்பாக சென்னையில் முதல் முறையாக இரவு நேர கார் ரேஸ் நடத்தப்பட்டதை பாராட்டியும் அவர் பேசியுள்ளார்.
இந்தியாவில் இருந்து கிடைக்கும் ஆதரவு, தமிழ்நாடு விளையாட்டுத் துறை அளித்து வரும் ஆதரவு, தமிழ்நாடு அரசு மோட்டார் ஸ்போர்ட்ஸுக்கு அளித்து வரும் ஆதரவு மற்றும் அண்மையில் முதன் முறையாக சென்னையில் ரேஸ் நடத்திய அதுவும் இரவு நேர ரேஸ் நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் முயற்சி பாராட்டுக்குறியது என தெரிவித்துள்ளார்.
துபாய் கார் ரேஸ் போட்டியில் அஜித் குமார் தலைமையிலான அணி பங்கேற்று 3வது பரிசு பெற்ற நிலையில், இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அஜித் குமாரின் இந்த பாராட்டு தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
“சென்னையில் கார் ரேஸ் நடத்திய முதலமைச்சர், துணை முதலமைச்சர் நடவடிக்கைக்கு பாராட்டு”
– நடிகர் அஜித் குமார் பேட்டி#Ajith #AK #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/KHInOCJf4p
— News18 Tamil Nadu (@News18TamilNadu) January 17, 2025

















