சினிமா
55 லட்சம் கூட வசூல் பண்ணல.. இதுல ராஷ்மிகாவுக்கு போட்டியா? ஐஸ்வர்யா ராஜேஷை கலாய்க்கும் ரசிகர்கள்!

ஐஸ்வர்யா ராஜேஷ் கடந்த 6 மாத காலத்தில் 5க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தள்ளி விட்டார். ஆனால், வேடிக்கை என்னவென்றால் அவர் நல்லா நடித்தும் ஒரு படம் கூட உருப்படியாக ஓடவில்லை.
சமீபத்தில் வெளியான ஃபர்ஹானா திரைப்படத்திற்கு அவ்வளவு ப்ரமோஷன், ஃப்ரீ பப்ளிசிட்டி உள்ளிட்டவை நடந்தாலும் படத்தை ரசிகர்கள் புறக்கணித்து விட்டனர்.

#image_title
தமிழ்நாடு, கேரளாவில் எதிர்ப்பு கிளம்பி மறைமுகமாக தடை செய்யப்பட்ட தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வட இந்தியாவில் 175 கோடி ரூபாய் கலெக்ட் செய்து இதுவரை எந்தவொரு லேடி சூப்பர்ஸ்டாரும் செய்யாத சாதனையை அதா சர்மா செய்து விட்டதாக கூறுகின்றனர்.
ஆனால், ஃபர்ஹானா படத்திற்கு டோட்டல் கிராஸே 55 லட்சம் கூட வரவில்லை என்றும் தயாரிப்பாளருக்கு ஷேர் எல்லாம் வெறும் 15 லட்சம் மட்டுமே வரும் என்றும் கூறுகின்றனர்.

#image_title
ஐஸ்வர்யா ராஜேஷ் சம்பளமே 50 முதல் 70 லட்சம் வரை இருக்கும் என்கின்றனர். இந்த நிலைமையில், அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் ராஷ்மிகாவுக்கு பதிலாக ஸ்ரீவல்லி கதாபாத்திரத்தில் தான் பொருத்தமாக இருந்திருப்பேன் என பேசி இன்னொரு சர்ச்சையையும் கிளப்பி உள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
ராஷ்மிகா போல ஐஸ்வர்யா ராஜேஷ் இடுப்பை ஆட்டினால் யாரு பார்ப்பாங்க என்றும் வெறும் பாவாடை கட்டிக் கொண்டு பைக்கில் எல்லாம் ஐஸ்வர்யா ராஜேஷ் ட்ரிப்பிள்ஸ் போவாங்களா என ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.