சினிமா
அல்லாவும் அய்யனாரும் ஒன்னு அதை அறியாதவன் வாயில மண்ணு.. காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் டிரைலர்!

நடிகர் ஆர்யா, சித்தி இத்னானி, பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தின் அட்டகாசமான டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.
கொம்பன், மருது, தேவராட்டம், விருமன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குநர் முத்தையா தான் இந்த படத்தையும் இயக்கி உள்ளார்.

#image_title
காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் என டைட்டிலேயே விவகாரமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் டிரைலரில் வரும் அந்த அரியும் சிவனும் ஒண்ணு அறியாதவன் வாயில மண்ணு வசனத்தை விட இப்போ அல்லாவும் அய்யனாரும் ஒன்னு அதை அறியாதவன் வாயில மண்ணு என்கிற வசனம் தான் முக்கியம் என ஆர்யா பேசுவது எத்தனை சர்ச்சைகளை உருவாக்கும் என்பது தெரியவில்லை.
ஆனால், மதங்களை கடந்து மனிதம் தான் என்பதை வலியுறுத்தும் இதுபோன்ற படங்கள் தான் வரவேண்டும் என்றும் இந்து மற்றும் இஸ்லாமியர்களை பகைமை கொள்ளச் செய்யும் தி கேரளா ஸ்டோரி போன்ற படங்களுக்கு இங்கே இடமில்லை என ட்ரைலரை பார்த்து ரசிகர்கள் பொங்கி வருகின்றனர்.
ஆனால், வேடிக்கை என்னவென்றால் இரண்டு படங்களிலும் சித்தி இத்னானி நடித்து இருப்பது தான்.
கொம்பன், விருமன் கார்த்தியின் அதே லுக்கில் ஆர்யா இந்த படத்தில் வருகிறார். அதிரடியாக அத்தனை வில்லன்களையும் புரட்டிப் போட்டு எடுக்கிறார். நான் யாரை கல்யாணம் பண்ணிக்கணும்னு நான் தான் முடிவு பண்ணனும் என சித்தி இத்னானி பேசுகிறார். பிரபு இஸ்லாமியராக நடித்துள்ளார்.
இந்து – முஸ்லீம்கள் ஊருக்குள் அண்ணன் தம்பியாக இருந்து வரும் ஊரில் மதக்கலவரத்தை தூண்டி சிலர் பிரச்சனையை கிளப்ப பார்க்க அதை ஆர்யா எப்படி எதிர்த்து போராடுகிறார் என்பது தான் இந்த படத்தின் கதை என்பது டிரைலரை பார்த்தாலே தெளிவாக தெரிகிறது. வரும் ஜூன் 2ம் தேதி தியேட்டரில் வெளியாகிறது இந்த படம்.