Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் – 02.11.2026

Published

on

  1. டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி! வங்கிகளின் அலட்சியத்தால் ஏற்படும் இணையவழிப் பண மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உச்சநீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்!
  2. ரேஷன் கடைகளுக்காக வாங்கிய 250 டன் வெங்காயம் அழுகி வீணாகும் அவலம்! கொருக்குப்பேட்டை சேமிப்புக் கிடங்கில் தேங்கிக் கிடக்கும் வெங்காய மூட்டைகள்!  3 நாட்களுக்கு மேலாக சேமிப்புக் கிடங்கில் இருப்பதால் வெங்காயங்கள் அழுகி துர்நாற்றம் வீசுவதாகத் தகவல்.
  3. புல்லட் புரூஃப் பாதுகாப்பில் அமிதாப் பச்சன்! ரசிகர்களைச் சந்திக்கும்போது குண்டு துளைக்காத கண்ணாடி பாதுகாப்புடன் வந்த அமிதாப்! நடிகர் டைகர் ஷெராஃப் சுடப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து தற்காப்பு நடவடிக்கைகள் தீவிரம்!
  4. அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயில் கேரளா 23%, ஆந்திரா 24%, கர்நாடகா 18%, தெலுங்கானா 14% என அண்டை மாநிலங்கள் இரட்டை இலக்கத்தில் வளர தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கியுள்ளது.- தங்கம் தென்னரசு
  5. இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.360 உயர்ந்து கிராம் ரூ.12775க்கும் சவரன் ரூ.102200க்கும் விற்பனை ஆகிறது.
  6. இந்றைய வெள்ளி விலை – விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.200க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.200000க்கும் விற்பனை ஆகிறது.
  7. இனி வாட்ஸ்அப் செயலி (8796441800) மூலம் EPFO இருப்பை சரிபார்க்கவும் பரிவர்த்தனைகளைக் காணவும் பாஸ்புக்கை பதிவிறக்கம் செய்யவும் முடியும். புதிய வசதியை ஒன்றிய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்.
  8. ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த அரசுக்கு ஆவின் பரிந்துரை
  9. ஹூண்டாய், கியா நிறுவனங்களுக்கு உதிரிபாகங்களை வழங்கும் தென் கொரியாவைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு பதிராக ஆந்திராவில் ரூ.1614 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம்.
  10. ரூ.800 கோடி பட்ஜெட்டில் இணையும் ரஜினி – கமல்: இந்தியத் திரையுலகையே அதிரவைக்கும் நெல்சனின் மெகா கூட்டணி! தமிழ் சினிமா வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத பிரம்மாண்டமான கூட்டணி ஒன்று உருவாகி வருவதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரே திரையில் இணையவுள்ளனர்.
Uncategorized7 minutes ago

ரூ.800 கோடி பட்ஜெட்டில் இணையும் ரஜினி – கமல்: இந்தியத் திரையுலகையே அதிரவைக்கும் நெல்சனின் மெகா கூட்டணி!

இந்தியா19 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 02.11.2026

Uncategorized4 மணி நேரங்கள் ago

டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்தியா17 மணி நேரங்கள் ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

இந்தியா18 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.11.2026

இந்தியா21 மணி நேரங்கள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா21 மணி நேரங்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா21 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 01.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

Translate »
Links to your homepage and selected subpages are placed into a rotating link pool together with links from other websites using this free link building tool..