சினிமா
ராஷ்மிகா மந்தனாவும் இந்த பிரபல நடிகரும் காதலிக்கிறாங்களா? உண்மையை சொன்ன நடிகர்!

நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னட சினிமாவில் கிரிக் பார்ட்டி படத்தில் அறிமுகமானார். அந்த படத்தில் நாயகனாக நடித்த ரக்ஷித் ஷெட்டி உடன் காதலில் விழுந்தார்.
ரக்ஷித் ஷெட்டி மற்றும் ராஷ்மிகா மந்தனா பல இடங்களுக்கு டேட்டிங் செய்து வந்த நிலையில், நிச்சயதார்த்தம் வரை சென்றது. ஆனால், மனக்கசப்பு காரணமாக அந்த நிச்சயதார்த்தம் திருமணம் வரை செல்லவில்லை.

#image_title
அதன் பின்னர், டோலிவுட், கோலிவுட் மற்றும் பாலிவுட் என டாப் நடிகையாக வலம் வருகிறார் ராஷ்மிகா மந்தனா.
விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் படம் வேறலெவல் ஹிட் அடிக்க அடுத்தடுத்து பெரிய நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பு ராஷ்மிகாவுக்கு கிடைத்தது.
விஜய் தேவரகொண்டா உடன் கீதா கோவிந்தம், டியர் காம்ரேடு உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து இணைந்து நடித்த நிலையில், இருவரும் காதலித்து வருவதாக பேச்சுக்கள் அடிப்பட்டன. சமீபத்தில் கூட புத்தாண்டு கொண்டாட்டத்தை விஜய் தேவரகொண்டாவுடன் மாலத்தீவில் ராஷ்மிகா கொண்டாடி இருந்தார் என போட்டோ ஆதாரங்களையும் ரசிகர்கள் வெளியிட்டனர்.

#image_title
இருவரும் ஒரே நீச்சல் குளத்தில் இருந்தனர் என்றும் ராஷ்மிகாவின் கூலர்ஸை விஜய் தேவரகொண்டா அணிந்திருந்தார் என்றும் ஏகப்பட்ட டீகோடிங்குகள் நடைபெற்றன.
இந்நிலையில், புதிதாக தெலுங்கு நடிகர் பெல்லம் கொண்ட சாய் ஸ்ரீனிவாஸ் உடன் நடிகை ராஷ்மிகா மந்தனா காதலில் விழுந்து விட்டார் என்றும் இருவரும் ஒன்றாக மும்பை விமான நிலையத்தில் படு நெருக்கமாக வந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் கிளப்பி விட்டனர்.
ஆனால், இந்த வதந்தியை ரொம்ப நாட்களுக்கு நீட்டிக்க விடக் கூடாது என்பதற்காக சாய் ஸ்ரீனிவாஸ் அய்யய்யோ ராஷ்மிகாவை எல்லாம் நான் காதலிக்கவில்லை. இருவரும் எதேச்சையாக ஏர்போர்ட்டில் சந்தித்துக் கொண்டு நலம் விசாரித்தோம் என விளக்கம் கொடுத்து காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.