சினிமா
ஃபர்ஹானா விமர்சனம்: பெண்களுக்கு வேலை இடங்களில் வரும் பிரச்சனைகளை பேசும் நல்ல படம்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பெரிய நடிகர்களுடன் ஜோடிப் போட்டு நடிப்பதை முற்றிலுமாக குறைத்து விட்டு சிறிய பட்ஜெட்டில் நல்ல கருத்துள்ள படங்களையும் உமன் சென்ட்ரிக் படங்களில் போல்டான கதைகளை தேர்வு செய்தும் நடித்து வருகிறார்.
சொப்பன சுந்தரி படத்தில் சாதாரண சென்னை பெண்ணாக நடித்து மிரட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ் இயக்குநர் நெல்சன் வெங்கடேஷன் இயக்கத்தில் உருவாகி உள்ள ஃபர்ஹானா படத்தில் திருவல்லிக்கேணியில் ஒரு சாதாரண இஸ்லாமிய குடும்பத்து பெண் ஃபர்ஹானாவாகவே நடித்துள்ளார் என்பதை விட வாழ்ந்துள்ளார் என்றே சொல்லலாம்.

#image_title
ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் என சூப்பரான படங்களை கொடுத்த நெல்சன் வெங்கடேஷன் இந்த படத்திலும் நல்ல முயற்சியை செய்திருக்கிறார்.
ஜித்தன் ரமேஷின் மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ் லீடு ரோலில் நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷின் அப்பாவாக கிட்டு மதப்பற்றுள்ள இஸ்லாமியராக நடித்துள்ளார். கடன் வாங்குவது கூட தப்பு என இஸ்லாம் மதத்தில் சொல்லி இருப்பதை கஷ்டமான சூழலிலும் கடைபிடிப்பவர்.
ஆனால், குடும்ப சூழ்நிலை மற்றும் குழந்தைகள் படிப்பிற்காக கால் சென்டர் ஒன்றில் வேலைக்கு செல்ல நினைக்கிறார். ஜித்தன் ரமேஷ் பிரச்சனை பண்ணாமல் மனைவியை வேலைக்கு அனுப்பி வைக்கிறார்.
வேலைக்கு சென்ற இடத்தில் அதிக இன்சென்டிவ் கிடைக்கும் இன்னொரு டீம் பற்றி அறியும் ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த டீமில் வேலைக்கு சேர ஆசைப்படுகிறார்.
பிரச்சனையே அங்கே தான் ஆரம்பிக்கிறது. ஃபிரண்ட்ஸ் சாட் என்கிற பெயரில் நடக்கும் அந்த சாட்டில் ஆபாச சாட் செய்வது தான் அங்கே வேலை செய்யும் கால் சென்டர் பெண்களின் வேலையே என பகீரை கிளப்புகின்றனர்.

#image_title
அடையாளம் தெரியாது என்பதால் அதில் பேசவும் தயங்காமல் முன்பு வேலை செய்த டீமுக்கும் மாறாமல் வேலை செய்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் அடையாளம் செல்வராகவனுக்கு தெரிய வர அடுத்தடுத்த சிக்கலில் ஐஸ்வர்யா ராஜேஷ் சிக்குகிறார்.
அதில், இருந்து எப்படி தப்பித்தாரா? இல்லையா? என்பது தான் ஃபர்ஹானா படத்தின் கதை.
ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்திலும் உசுரை கொடுத்து நடித்துள்ளார். ஆனால், தி கேரளா ஸ்டோரி படம் வெளியான உடனே இந்த படம் வெளியானது தான் பெரும் பின்னடைவாக மாறி உள்ளது. பார்ப்பதற்கு நல்ல படமாக இருந்தாலும், படத்தை பார்க்க ரசிகர்கள் விருப்பம் தெரிவிக்காமல் உள்ளனர்.
சில லாஜிக் மீறல்கள், சில கேள்விகள் என ஆங்காங்கே குறைகள் இருந்தாலும், இந்த படத்தை த்ரில்லர் படமாகவும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு என்ன என்ன பிரச்சனை வரும் அதை தீர்க்க குடும்பத்தினர் என்ன செய்ய வேண்டும் என்பதை இயக்குநர் மெசேஜாக கொடுத்துள்ள விதம் சிறப்பு. ஃபர்ஹானா – பார்க்கலாம்!
ரேட்டிங்: 3.5/5.