இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

- தீபாவளியையொட்டி வெற்றி சிறப்புக் காய்கறிகள் தொகுப்பு திட்டத்தை அறிவித்தது தமிழ்நாடு அரசு. 100 ரூபாய்க்கு பத்து காய்கறிகள் அடங்கிய தொகுப்பு நாளை முதல் விற்பனை. இதில் வெங்காயம், தக்காளி தலா அரை கிலோவும், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு தலா கால் கிலோவும் தேங்காய், கேரட், பீன்ஸ், எலுமிச்சை, இஞ்சி, பச்சை மிளகாயும் வழங்கப்படும்.
- சென்னையிலும் கோவை, ஈரோட்டிலும் களையிழந்த தீபாவளி ஷாப்பிங்! விலையேற்றம் மற்றும் ஆன்லைன் விற்பனை காரணமாக வியாபாரம் பாதிப்பு – வியாபாரிகள் கவலை! மக்கள் கூட்டம் குறைந்ததால் வியாபாரிகள் ஏமாற்றம்!
- அமெரிக்காவின் இடைக்காலத் தேர்தலில் செனட் சபையை டொனால்ட் ட்ரம்பின் குடியரசு கட்சி இழந்தது. மொத்த இடங்களான 100 இடங்களில் பெரும்பான்மைக்கான 51 இடங்களை வென்றது எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி.
- 2021-22 ம் கல்வி ஆண்டில் தொடங்கப்பட்ட அரசு மாதிரிப் பள்ளிகளின் பெயர் “வெற்றிப் பள்ளிகள்“ என மாற்றப்பட்டது.
- தமிழ்நாட்ல் 5 தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை தீபாவளிக்க பிறகு தேர்தல் ஆணையம் வெளியிடவுள்ளதாக தகவல். சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்நும் காவல்துறையினருடன் ஆலோசனை நடந்து வருகிறது. அதன்படி டிசம்பர் 20க்குள் இடைத்தேர்தலை நடத்தி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
- தெலங்கானா மாநிலம் பெத்த அம்பர்பேட்டை அருகே வாடகை வீட்டில் ரூ.6.78 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகளை அச்சடித்த கும்பலைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். காரில் ரூ.8 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளைக் கொண்டு சென்றபோது பிடிபட்டனர். ஸ்கேனர், பிரிண்டர், போலி வாகனப் பதிவு எண்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்.
- ரூ.8 கோடி திருட்டு! புதுச்சேரி மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரியின் வங்கிக் கணக்கை ஹேக் செய்து மர்ம நபர்கள் கைவரிசை!
- அமெரிக்க மக்கள் தன்னைப் பார்த்துச் சலிப்படைந்துவிட்டால், இஸ்ரேலுக்குச் சென்று அந்நாட்டின் பிரதமராகப் பதவியேற்பேன் என அதிபர் டொனால்ட் டிரம்ப் நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.
- அமெரிக்க வரலாற்றில் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கருப்பினப் பெண்! அமெரிக்க வரலாற்றில் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்படும் முதல் கருப்பினப் பெண் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்தார் ஜனநாயக கட்சியின் கேஷா லான்ஸ்! ஜார்ஜியா மாநில ஆளுநர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரை தோற்கடித்து கேஷா லான்ஸ் வெற்றி.
- காசாவைச் சேர்ந்த 18 வயது மாணவி சபா ரபா (Saba Rabah), பாலஸ்தீனத்தின் தேசிய இடைநிலைக் கல்வித் தேர்வான ‘தவ்ஜிஹி’ (Tawjihi) பரீட்சையில் 99.9% பெற்று அறிவியல் பிரிவில் பாலஸ்தீனம் முழுவதும் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். போரில் தனது தந்தையை இழந்து, வீட்டைவிட்டுத் துரத்தப்பட்டு, தொடர் இடபெயர்வுகள், மின்வெட்டு மற்றும் இணையத் தடைகள் எனப் பல இன்னல்களைச் சந்தித்த போதிலும், கைப்பேசி வெளிச்சத்தில் படித்து அவர் இந்த வெற்றியை ஈட்டியுள்ளார். தனது தந்தையின் மருத்துவக் கனவை நனவாக்க விரும்பும் சபாவின் இந்த அசாத்திய சாதனை தற்போது உலகளாவிய அளவில் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
- அமெரிக்கா – ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், அணுக்கருத் தாக்குதல் ஏற்பட்டால் பொதுமக்கள் எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது தொடர்பான எச்சரிக்கை காணொளி ஒன்றை ஈரானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
