Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.11.2026

Published

on

  1. வருமானத்தை மறைத்ததாகக் கூறி நடிகர் விஜய் ரூ.1.50 கோடி அபராதம் செலுத்தும்படி வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவு செல்லும். – சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராம்மூர்த்தி தீர்ப்பு.
  2. டாஸ்மாக் ஊழியர்களுக்கு நவம்பர் 15 முதல் சீருடை கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் அதனை அணிய மாட்டோம் என டாஸ்மாக் ஊழியர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். சீருடை தங்களை சமூகத்தில் தனித்து காட்டும். வசூல் பணத்தை எடுத்துச் செல்லும்போது வழிப்பறிக்கு வழிவகுக்கும் என அவர்கள் கூறுகின்றனர்.
  3. ரூ.5000 கோடி நிதி மோசடி வழக்கில் BLM பிரேம்குமார் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு. முதலீட்டாளர்களின் சேமிப்புப் பணத்தை கொண்டு சொகுசு விடுதி, திரையரங்குகள் வாங்கியது உட்பட சட்டவிரோத பணபரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு.
  4. 33 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரைக்கு வருகிறது இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனின் பிரம்மாண்ட படைப்பான “ஜென்டில்மேன்“ திரைப்படம் டிசம்பர் 11ம் தேதி உலகம் முழுதும் வெளியாகவுள்ளது.
  5. எபோலா வைரஸ் பரவல் எதிரொலி…… இந்திய குடிவரவுத்துறை நேற்று(01/11/26) மாலையில் வெளியிட்டுள்ள புதிய அதிகாரப்பூர்வ அறிக்கையில் இந்தியாவுக்கு வரும் அனைத்துப் பயணிகளும், வருகைக்கு முன்பாகக் கட்டாயமான “ஏர் சுவிதா” சுய-அறிவிப்புப் படிவத்தை(SDF) 24 மணி நேரத்திற்கு முன்னர் இந்தப் படிவத்தை இணையவழியில் பூர்த்தி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இந்திய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள், வெளிநாட்டு இந்தியக் குடிமகன்(OCI) அட்டை வைத்திருப்பவர்கள், வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் என்று இந்தியாவி்ல் நுழையும் அனைவருக்கும் இது கட்டாயமாகும்.
  6. பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் 3.82 ஏக்கரில் அமைந்துள்ள 92 அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க டெண்டர் கோரியது த.வெ.க.அரசு.
  7. ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட ஜம்மு காஷ்மீரில் தீவிரக் கண்காணிப்பு மற்றும் நேரடி பாதுகாப்பு நிர்வாகம் அமலில் உள்ள சூழலிலும் 2019 முதல் 2026 வரை 16,397 பெண்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்ட தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
  8. தென் கொரியாவின் KAIST (Korea Advanced Institute of Science and Technology) ஆராய்ச்சியாளர்கள், புற்றுநோய் செல்களை அழிப்பதற்குப் பதிலாக அவற்றை மீண்டும் இயல்பான செல்களைப் போன்ற நிலைக்கு மாற்றும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். இந்த ஆராய்ச்சியில், பெருங்குடல் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் சில முக்கிய மரபணுக்களை அடையாளம் கண்டுள்ளனர். அவற்றின் செயல்பாட்டை மாற்றுவதன் மூலம் புற்றுநோய் செல்களை இயல்பான குடல் செல்களைப் போன்ற நிலைக்கு மாற்ற முடிந்துள்ளது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா1 minute ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.11.2026

Uncategorized7 மணி நேரங்கள் ago

ரூ.800 கோடி பட்ஜெட்டில் இணையும் ரஜினி – கமல்: இந்தியத் திரையுலகையே அதிரவைக்கும் நெல்சனின் மெகா கூட்டணி!

இந்தியா7 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 02.11.2026

Uncategorized11 மணி நேரங்கள் ago

டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்தியா1 நாள் ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.11.2026

இந்தியா1 நாள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா1 நாள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 01.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

Uncategorized4 நாட்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 30.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா2 நாட்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

Translate »
scale your rankings with free backlinks & website citations.