சினிமா
தளபதி 68 படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட விஜய்!

தளபதி 68 படத்தை அட்லீ இயக்கப் போகிறார் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 400 கோடி பட்ஜெட்டில் என உலக மகா உருட்டு உருட்டப்பட்ட நிலையில், தற்போது தளபதி 68 படத்தை அட்லீ இயக்கப் போவதில்லை என்பது உறுதியாகி விட்டது.
மேலும், தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் மலினேனி உள்ளிட்ட யாரும் இயக்கப் போவதில்லை என்றும் இயக்குநர் வெங்கட் பிரபு தான் அந்த படத்தை இயக்கப் போகிறார் என சில நாட்களுக்கு முன்னதாகவே தகவல்கள் கசிந்த நிலையில், அவசர அவசரமாக ஞாயிற்றுக்கிழமையான இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை தளபதி விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து விட்டார்.

#image_title
பிகில் படத்திற்கு பிறகு பெரிய படங்களை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்காத நிலையில், பலத்த நஷ்டமடைந்து விட்டதாக ட்ரோல்கள் பறந்த நிலையில், தற்போது மீண்டும் விஜய்யை வைத்து தளபதி 68 படத்தையே தயாரிக்க அர்ச்சனா கல்பாத்தி தயாராகி விட்டார்.
பல ஆண்டுகளாக விஜய் படத்தை இயக்க போராடி வந்த வெங்கட் பிரபு ஒரு வழியாக தளபதி 68 படத்தின் மூலம் விஜய்யை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

#image_title
இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என வதந்திகள் வெளியான நிலையில், அதற்கும் அறிமுக வீடியோவிலேயே ஆப்பு வைத்து விட்டனர். வழக்கம் போல வெங்கட் பிரபுவின் இந்த படத்துக்கும் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைக்க உள்ளார்.
ஹீரோயின், பட பூஜை, படம் ஆரம்பிக்கும் தேதி உள்ளிட்டவை குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
படத்தின் அறிவிப்பு வீடியோவிலேயே புதிர் விளையாட்டு நிறைந்திருப்பதால் மாநாடு போல இந்த படமும் வித்தியாசமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.