Connect with us

சினிமா

சொப்பன சுந்தரி விமர்சனம்: ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த சொப்பன சுந்தரி சூப்பரா? சுமாரா?

Published

on

எஸ். ஜி. சார்லஸ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், லக்‌ஷ்மிப்ரியா சந்திரமவுலி, தீபா சங்கர், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, சுனில், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள சொப்பன சுந்தரி படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

இன்று வெளியான  படங்களில் ரசிகர்களை கொஞ்சம் சிரிக்க வைக்கும் படம் என்றால் அது சொப்பன சுந்தரி தான் என சொல்லலாம். முதல் பாதி கொஞ்சம் சொதப்பலாகவே சென்றாலும், இரண்டாம் பாதி ஏகப்பட்ட ட்விஸ்ட் மற்றும் டார்க் காமெடிகளை தூவி கோலமாவு கோகிலா எஃபெக்ட்டை கொடுக்க நினைத்து ஜோதிகாவின் ஜாக்பாட் ரேஞ்சுக்கு படத்தை கொடுத்து இருக்கிறார் இயக்குநர்.

#image_title

சொப்பந்த சுந்தரி என்கிற டைட்டில் படத்திற்கு பெரிய உருத்தலாகவே உள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் கவர்ச்சி நடிகையாக இந்த படத்தில் வரவில்லை. சாதாரண குடும்பத்து பெண் தான். கரகாட்டக்காரன் படத்தில் வரும் கார் காமெடியில் இந்த கார வச்சிருந்த சொப்பன சுந்தரியை இப்ப யாரு வச்சிருக்கா என்பது போல படத்தின் கதை கார் ஒன்றை மையமாக வைத்து நகர்வதால் கேட்சியாக இருக்க இப்படியொரு டைட்டிலை இயக்குநர் வர்த்தக ரீதியாக யோசித்திருக்கிறார் என புரிகிறது.

வாய் பேச முடியாத அக்கா லக்‌ஷ்மி பிரியா சந்திரமுவுலி மற்றும் அதிகம் வாய் பேசும் அம்மா தீபா சங்கருக்காக நகைக்கடை ஒன்றில் கஷ்டப்பட்டு வேலை பார்த்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அவரது கடையில் நடத்தப்படும் ஒரு குலுக்கல் போட்டியில் கார் ஒன்று பரிசாக விழுகிறது.

#image_title

காதலித்து கல்யாணம் பண்ணிக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் கருணாகரன் அந்த காரை எப்படியாவது அடைய வேண்டும் என ஆசைக் கொண்டு தான் வாங்கிய நகையின் மூலம் விழுந்த குலுக்கல் சீட்டில் தான் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இந்த கார் கிடைத்தது என போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க கார் ஸ்டேஷனுக்கு செல்கிறது.

கூடப் பிறந்த தங்கச்சிகளை கஷ்டப்பட்டு எத்தனையோ அண்ணன்கள் திருமணம் எல்லாம் செய்துக் கொள்ளாமல் கரை சேர்த்து வரும் இதே ஊரில் இப்படியும் சில அண்ணன்கள் இருக்கத்தான் செய்கின்றனர் என்பதை அழுத்தம் திருத்தமாக இந்த படம் துணிச்சலாக சொல்வதற்கு பாராட்டுக்களை தரலாம்.

ஆனால், படம் முழுக்க திரும்பத் திரும்ப அந்த ஒரே இடத்தில் கதை நகர்வது ரசிகர்களை ரொம்பவே அப்செட் ஆக்குகிறது. டார்க் காமெடி படத்தை எளிமையான சப்ஜெக்ட் கொண்டு இயக்குநர் உருவாக்கி உள்ளார். நடிகர்கள் தங்கள் பங்குக்கு நடிப்பால் மிரட்டி எடுக்கின்றனர்.

ஒரு சில இடங்கள் மொக்கையாக இருந்தாலும், ஒட்டுமொத்தமாக சொப்பன சுந்தரியை ஒரு முறை தியேட்டரில் தாராளமாக பார்க்கலாம்.  சொப்பன சுந்தரி – சீப்பான முந்திரி!

ரேட்டிங்: 2.75/5.

author avatar
seithichurul
தினபலன்1 மணி நேரம் ago

இன்றைய ராசி பலன் : சனிக்கிழமை (27-07-2024)

விமர்சனம்12 மணி நேரங்கள் ago

ராயன் திரை விமர்சனம் | Raayan – Movie Review

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி கிருத்திகைக்கு திருத்தணி முருகன் கோயில் கட்டணச் சலுகை!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

சங்கடஹர சதுர்த்தி: தேனியில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்!

கிரிக்கெட்15 மணி நேரங்கள் ago

IND vs SL 2024: முதல் T20-ல் மழை இல்லை, வானிலை சாதகமாக உள்ளது!

சினிமா16 மணி நேரங்கள் ago

ரஜினிகாந்த்: பேரனுக்காக ஒரு அன்பான தாத்தா!

செய்திகள்16 மணி நேரங்கள் ago

வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம்: இன்ஸ்டாகிராம் ஸ்டைல் மென்ஷன் வசதி!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆடி மாதத்தில் அம்மன் கோவிலில் கூழ் ஊற்றுவது ஏன்? – ஒரு விரிவான பார்வை

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

வீட்டில் பணம் தங்கவில்லையா? லட்சுமி கடாக்ஷம் பெறுங்கள்!

சினிமா17 மணி நேரங்கள் ago

தனுஷின் ராயன்: ரசிகர்களுடன் கண்ணீர் மழை! 50வது பட வெற்றி விழா!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆடி பௌர்ணமி சிறப்புகள் என்ன?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

நாம் ஒரு நாளைக்கு எத்தனை நிமிடங்கள் வரை பல் துலக்க வேண்டும் தெரியுமா?

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!